தொடர் கதை...

நெடுநேரப் பயணம்...
நெடும்பாதைத் தூரம்...
கொடும்பாவி போல, 
வேகுமென் மனமும்.

வெளஞ்சதில் பாகம்பிரிச்சு
சிறுக சிறுகச் சேர்த்ததிலும்
நாலாப் பிரிச்சு
நானும்
நடைபயணம் போறேன்
நான் பெத்தமக்களைப் 
பார்க்கத்தான் போறேன்

வானும் மண்ணும் 
வாவாங்கும் என்னை, 
நான் நாலுதெசைக்கும் போறேன்
நோவாமெ நோவேன்...

எனக்கு பிள்ளை வரம் தந்தவரு...
ஆண்பிள்ளையா நின்னவரு...
அஞ்சாறு வருசமுன்னே
ஆடிக் காத்தோட, 
அவருகதையும் முடிஞ்சிப்போச்சு...

மக்களை கொடுத்த இடமெல்லாம்
குடியும் குடித்தனமும் 
கொலை நடுங்கி நிக்குதுக
ஏங்கொடியில் பூத்ததுக

அங்கே நண்டானும் சுண்டானும்
வாய்க்கு ருசியில்லாமல்
வக்கத்து நிக்குது

மாமியார் குடுத்ததுன்னா
மரியாதை இல்லையாம்

உடுக்கு அடிக்காமல் 
ஆடுது கொலசாமி - அதுல

வெட்டுக்கு நிக்கிற ஆடுபோலே
வெளங்காம நிக்குதுக மக்க, 
வேற வழியத்து நிக்குதுக எனைப்பாக்க...

தவிச்சி நிக்குதே 
சிறு தளிரு

இது குருத்தோலை தானே
கொடுக்காது போனா
குருத்தும் கருகாதிருக்குமோ

கும்பிட்டு கொட்டுவேன்
குலசாமியினு கெஞ்சுவேன்

நாலு பேருக்கும் ஒதுக்குன பாகந்தான்
பங்கு வாங்குறதில் பாதகமில்லைன்னு
கெஞ்சாமல் கெஞ்சுவேன்

நேரம் போனதும் 
உள்ளே போனது குறைய
குறைஞ்சிபோச்சு சத்தம்
நானும் சத்தமில்லாமல் 
புறப்படுவேன்

ஒத்த தெச முடிஞ்ச நிம்மதியோட
வீடுவந்து சேந்தேன்

இன்னும் மூனுதெச போகனுமே
ஏம்மூச்சும் ஒப்புவருமா

அங்கே கண்காணாதூரத்து
காத்துகிடக்குதே

நான் மடிசுமந்த கொடிமுல்லை,
போகாமலிருக்க 
மனசு வருமா

ஏன் உசுரே...
இன்னும் கொஞ்சகாலம் 
நான் மண்ணோடு போகும்வரை
என்னோடு துணை வருவியா

செருவாவிடுதி :
சி. செந்தில் குமார்

Comments

Popular posts from this blog

சொல்லாடல்

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை