Posts

Showing posts from August, 2021

கோகுலும் யோசிக்கலானான்

மன அழுத்தம் என்பதைவிட வேறொரு கொடிய நோய் இருப்பதாய் சொல்லவில்லை அறிவியலும். அது இருப்பதும் தெரியாமல் தன்னை அரிப்பதும் தெரியாமலே தூபம்போட்டு வைத்திருப்பார் தனக்குள்ளே. மனழுத்தம் கொடியது என்று தெரிந்தாலும், அசைபோடும் ஆவினம் போன்றும்... செக்கையேச் சுற்றி வரும் காளையைப் போன்றும்,  இந்த மனசும்.... அதையே செய்யும்; திரும்பத்திரும்ப. அதை எதைவைத்து அடிப்பதென்பது தான் வருந்துவோரின் நினைப்பு....  மனம் அழுத்தம் கொள்ளும் அந்நிலை வராமல் பார்த்துக் கொள்வதே மனிதர்களின் தலையாயக் கடைமையில் ஒன்று என்று உணர்த்த வேண்டியக் காலமிது. அப்படித்தான் மகேந்திரனும் துன்பத்துக்கு வாக்கப்பட்டவன் போல்  சதாசர்வகாலமும் சோகமயமாகவே இருப்பான். ஏனென்றால்,  என்மேல் அம்மாவுக்கு பாசமில்லை மனைவியும் பேசுவதில்லை என்பதோடு... பிள்ளைகளும் என்சொல் கேட்பதில்லை என்பதே இவன் குறை... சரி இதென்ன பெரிய காரியம், மகேந்திரன் வீட்டில்பேசி சரி செய்யலாம், என்றொருநாள்  புறப்பட்டான் கோகுல்.  வாடா வா... என்றழைத்தான். மமகேந்திரன். இருக்கையில் இருக்கச் சொன்னான். சொன்னதிலிருந்து ஒரு மணிநேரம் இடைவிடாது பேசினான்; பெரும் அடைமழையில் சாரலாய். சற்று எனக்கும்

தொடர் கதை...

நெடுநேரப் பயணம்... நெடும்பாதைத் தூரம்... கொடும்பாவி போல,  வேகுமென் மனமும். வெளஞ்சதில் பாகம்பிரிச்சு சிறுக சிறுகச் சேர்த்ததிலும் நாலாப் பிரிச்சு நானும் நடைபயணம் போறேன் நான் பெத்தமக்களைப்  பார்க்கத்தான் போறேன் வானும் மண்ணும்  வாவாங்கும் என்னை,  நான் நாலுதெசைக்கும் போறேன் நோவாமெ நோவேன்... எனக்கு பிள்ளை வரம் தந்தவரு... ஆண்பிள்ளையா நின்னவரு... அஞ்சாறு வருசமுன்னே ஆடிக் காத்தோட,  அவருகதையும் முடிஞ்சிப்போச்சு... மக்களை கொடுத்த இடமெல்லாம் குடியும் குடித்தனமும்  கொலை நடுங்கி நிக்குதுக ஏங்கொடியில் பூத்ததுக அங்கே நண்டானும் சுண்டானும் வாய்க்கு ருசியில்லாமல் வக்கத்து நிக்குது மாமியார் குடுத்ததுன்னா மரியாதை இல்லையாம் உடுக்கு அடிக்காமல்  ஆடுது கொலசாமி - அதுல வெட்டுக்கு நிக்கிற ஆடுபோலே வெளங்காம நிக்குதுக மக்க,  வேற வழியத்து நிக்குதுக எனைப்பாக்க... தவிச்சி நிக்குதே  சிறு தளிரு இது குருத்தோலை தானே கொடுக்காது போனா குருத்தும் கருகாதிருக்குமோ கும்பிட்டு கொட்டுவேன் குலசாமியினு கெஞ்சுவேன் நாலு பேருக்கும் ஒதுக்குன பாகந்தான் பங்கு வாங்குறதில் பாதகமில்லைன்னு கெஞ்சாமல் கெஞ்சுவேன் நேரம் போனதும்  உள்ளே போனது குறைய

முயற்சியே மூலதனம்

எறும்பின் வலிமையால் இமயம் கூட இடமாற்றப்படும் புரிதலிருந்தால் மனிதனும் புனிதனாகலாம் 

அந்த இரண்டு நிமிடம்....

கடுங்கோபத்துடன் இருள் சூழ்ந்து வெளிச்சத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தது, மாலையும், மழை மேகமும் சேர்ந்து. அநேகமாக இன்னும் சற்றுநேரத்தில் மழை வரலாமென நினைக்கின்றேன் நான். அந்த மலைப்பாதையில் யாருமற்ற தனிமையில் குடைகூட இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் நந்தினி. சுற்றிலும் இருந்த மரங்களின் அசைவும் பறவைகளின் இரைச்சலும் சின்னஞ் சிறிய சில்வண்டின் ரீங்காரமும் ஒரு இனம் புரியாத பீதியை கொடுத்தது நந்தினிக்கு. நந்தினி எப்போதும் பேய், பூதம் என்பதற் கெல்லாம் பயப்படுவாளில்லை, ஆனாலும் இந்தச் சூழல் அவளை பயப்பட வைக்குமோ என்பதே எனக்கான பயம். தூரத்தில், தன் எதிரில் ஒரு வாகனம். மொத்த சாலையையும் குத்தகைக்கு எடுத்தார்போல் வெள்ளை நிறவொளியை சாலையெங்கும் வண்ணமடித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தது. அந்த வாகனம் தன்னருகில் நின்று விடக்கூடாது என்பதே இவள் கவலை. தனிமையில், அதிலும் சாலையில். ஒரு பெண்ணை கண்டால் வாகன ஓட்டி ஒலிப்பானை ஒரு புதுவித ராகத்தில் இசைப்பதும் தொல்லை கொடுப்பதுமாய் இருக்கும் என்பதும் எல்லோரும் அறிந்ததுதானே.... இவள் அருகில் வரவர வாகனம் வேகத்தை குறைப்பது நன்றாக உணரமுடிந்தது நந்தினிக்கு. அவள் தலைநிமிராமல் ந

என்னை கவர்ந்த வாசகம்

நீ சொல்வதை நான்  முற்றிலுமாக எதிர்க்கிறேன்... ஆனால்,  உன் கருத்தை சொல்வதற்கான  உன் உரிமைக்காக ... நான் சாகும்வரை போராடுவேன்                                                                         - வால்த்தேர்

சாமிக்கு இது சம்மதமா....

"அடி சக்கே... இது தான்டா மழை,  இப்படி இருந்தாத்தானே விளச்சல் நல்லா இருக்கும் ".என்று வாரிசுருட்டி எழுந்து உக்கார்ந்து, தனக்கு தானே சொல்லி மகிழ்ந்து கொண்டு.வெற்றிலையை போடத்தொடக்கினார் முத்தையன்.    வெட்டும் இடியில் விளக்கு இல்லாமலே,  வெற்றிலைக்கு சுண்ணாம்பு வைக்கவும் முடிந்தது முத்தையனால். சாரல், சாளரம் வழி சண்டையிட வீட்டிற்குள் வருவதையும் பொருட்படுத்தாமல் ; அந்த நல்லிரவு நேரத்திலும் மனுசன் தாளம்போட்டு ரசிக்கலானார். சடசடனு கொட்டும் அந்த பெரும் மழையின் இசையை.  காலையில் எழுந்து பார்த்தால். காடுகழனி எல்லாம் ஒரே வெள்ளக்காடுதான். யாரைப் பார்த்தாலும் புன்னகை பூத்தமுகமாய் இருந்தது. குளம் எல்லாம் நிரம்பி ஓடியதால் வயலெல்லாம் மீனின் துள்ளலாட்டம். அதை பிடித்து விளையாடும் சிறுவர்கள். அதையும் வாங்கி குழம்பு வைக்க ஓடும் பெருசுகள் என்று பார்ப்பதற்கு, அன்றுதான் ஊருக்குள் புதுசா மகிழ்ச்சி என்பது, குடித்தனம் வந்தது போன்றே இருந்தது .  அன்றிலிருந்து விவசாய வேலை தொடங்கிற்று. யாருக்கும் ஓய்வென்பது  வெற்றிலையில் வைக்கும் சுண்ணாம்பு அளவு கூட கிடைக்கவில்லை. ஊரே பரபரப்பில் இருக்கு. அதிலுங்கூட மாட்டுவண்

இது நெற்களம்

தூரப்பறந்திட எத்தனிக்காதே ! இது நெற்களம் முற்றத்தில் விழுவதே முற்றியக் கதிராகும் !!

உறவின் சுகம்!

வார்த்தை  ஒலியின் வேகத்தை விட, அதிவேகதையில் ஓடும்,  புத்தன் உறவின்முறையில் சிலர் தொட்டும் தொடாமலும் விரல் பட்டும் படாமலும் வேசமில்லா தொரு வார்த்தையை விதைப்பதில் மனம் கூத்தாடி  களிப்பதும் உண்டு... சோர்ந்தால்! தோள் சாய்த்து  தேற்றுவதும் உண்டு இதுதான் உறவு! சூறையில் அகப்பட்ட சோலையின் பிடியில் கொடியாடிடும் முல்லை தளிராய் உறவை தாண்டியும் சிலர் உண்மையின்  உள்ளிருந்தோ புறமிருந்தோ அண்ணனென்பார், மனந் தளராதிருக்க தம்பி யென்பார் கொடும் பகை தடுக்குமென் மாமனென்பார்,  மறுகனமே மைத்துனன் என்பார் ஆயினும் நாமவர் உறவின் முறைக்குள்  கரங்கூட நீட்டவோ மடக்கவோ தகுதி இல்லாதவன் என்பதை உணர்வோம் இதுதான் உண்மை! இதை யுணர்ந்ததென் மெய்!  இது மெய்!! செருவாவிடுதி : சி.செ

யோசித்தால் விளங்கும்

விறகு விற்பவனுக்கும் அதை வாங்கி எரிப்பவனுக்கும் என்ன பெரிய ஏற்றதாழ்வு இரண்டும் வயிற்றுக்காய் ஏற்ற வாழ்வுதானே

விடியுமா

என்ன அண்ணே நலமா... என்ற குரல்கேட்டு திரும்பிய அவனின் முகம் மலர்ந்த மல்லிகை இதழ்போல் பளிச்சிட்டது நீங்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கு நலத்துக்கு என்ன குறை வரப்போகிறது அண்ணே... என்றான் இவனும் மரியாதையோடு அதை கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளித்துள்ளி ஓடினான் முயலன் அதைப் பார்த்து ரசித்தவாரே நடையைத் தொடர்ந்தான் இந்த ரசிகன்  சற்றுத் தொலைவில் ஒரு புதரின் ஓரத்தில்  சருகுகள் நிறைந்த அந்த பள்ளத்திலிருந்து சரசரக்கும் சத்தத்துடன் மெல்ல எட்டிப் பார்த்தது ஒரு கருநிறத்தில் உடல் கொண்ட நாகனும்  அதை கவனித்த இந்த இயற்கை ரசிகன்,  ஒளிய வேண்டாம்...  நான் பார்த்திட்டேன்... வெளியே வர என்ன தயக்கம்  ஒன்னுமில்லை பக்கத்தில், வந்ததும் பயம்காண்டுவோமுன்னு நினைத்தேன்,  அதற்குள் கண்டு பிடிச்சிட்டியலே..! ஆமா... நீங்கள் பயமுறுத்திட்டாலும் என்று நகைப்போடு நடந்தான்  திடீரென்று... அண்ணே ஊருக்குள் ஏதும் புதிய சேதி இருக்கா ....என்றவாரே வந்தது நரியாரும் இல்லாமலா கட்டுன மனைவியை கட்டையால் அடிப்பதும், கைபற்றிய நாட்டு மக்களை துப்பாக்கியால் சுடுவதுமாய் ஏராளமான சேதி இருக்கு. இப்போது நேரமில்லை,  பிறகு பேசலாம்... என்றவாரே நடந்தான், நட

சின்னக்குட்டி ஆடு

" எந்த மாசமானாலும் ஆட்டுக்கு அது மே மாசந்தாண்டா பேராண்டி..." என்று சொல்லிக் கொண்டே வந்த கருப்பனோடு சேர்ந்து உதயனும் திருக்கிட்டுத்தான் நின்றார்கள். அங்கே கட்டிக்கிடக்கும் இருபது ஆடுக்கு மத்தியில் எப்போதும் தன் இருப்பையும் துருதுருப்பையும் காட்டிக் கொண்டிருக்கும் சின்னக்குட்டி ஆடு அங்கே காணாதது பேரதிர்ச்சியாய் இருந்தது. கறுயி அழிந்து அதுகாரணம் எங்கேயேனும் மேய்ச்சலுக்கு போயிருக்குமோ.... இல்லை யாரேனும்..... ஆமாம் யாரோ தனது கைவரிசையை தான் காட்டி இருக்கிறார்கள். கட்டுத்தறி வழக்கத்துக்கு மாறாக  இருந்ததும், ஒருசில காலடியும் இருந்தது கண்டு ஆழ்ந்து யோசிக்கலானார் உதயனுக்கும் ஒருவாறு சம்பவம் புரிந்தது, அவனும் "சின்னக்குட்டி என பெயர் சூட்டி  ஆசையாக  வளர்த்த அந்த பெரிய ஆட்டை களவாண்டது யார்? எப்படி என மிகவும் குழம்பினான் ..."  தாத்தா அங்கும் இங்குமாய் தன் பார்வையை ஓடவிட்டார். பின் கண்களை மூடி ஆழ்ந்து யோசித்தார்  ஒன்றும் பிடிபடமல் " உதயா  இராத்திரி ஆடு கத்துச்சாடா.... " அவனும் யோசிச்சிட்டு "அப்படி ஒன்னும் நினைவில்லையே தாத்தா" அதற்குள் கருப்பன் பத்தடி தள்ளிக் கி

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

நீ எட்டுவைத்த  நடையழகில் - பின்  காலில் கண்பட்டுத்தெறித்த இதயத்துகளை தேடுகின்றேன் அது  தொலைந்தயிடம் தெரியாமல் . . . . . . தும்பை செடிமேலே தொட்டு தொட்டு எழிலாடும் தும்பி கரம்போல்,  அன்பும் இடமாறும் இனிய வார்த்தை பரிமாறும் அழகே உன் காதலாலதுவும்  இனிதே நடந்தேறும் . . . . . . எள்ளின் வாசத்தில் நாசி துளைக்கும் சாரமாய் நீ பேசிய மொழிகேட்டு விழியோடு செவிகளும் வழியடைத்து நிற்கும் என்னுள்ளத்தின் அன்பும் வரும் வழிமறந்திருக்குமடி. . . உன்னோடு பேசினால் உலகும் மறந்துபோகும் உள்ளத்தின் சுமையும்  வெகுவாகக் குறைந்துபோகும் நோய் தீர்க்கும் மகளே உன் வார்த்தையே  பெரும் மருந்தோ என்று.  . . ஆய்வு செய்வோம்.  . . . . நீ தலைகுளிக்கும் போது,  என்னை கண்ட அவதியில் அள்ளிச் சொருகினாய் நீ அடுத்த கணமே அவிழ்ந்ததடி அதுவும் ஆஹா.  . . . அவிழ்ந்த இடத்திலிருந்து சொட்டும் தேன்துளியென நீர்த்துளி உன் கூந்தல் நுனியில் இருந்து தொலைபேசியில் உரையாடிய படி தொடும் தூரத்தில் நானிருந்து கேட்பேன் வரவா என்று. . . மேலும் கீழும் மூச்சிறைக்க மெல்லிய புன்னகை இதழ்முட்ட அய்யோ வேண்டாம் என்பாய் வெட்கத்தில் . . . . நானோ.  .  . உன் மூச்சிக்காற்றில்

மீண்டும் வசந்தம் தீண்டுமா . . .

வெளிநாட்டுக் கணவனே உள்ளம் தித்திக்க  இனிமைபேசும் என்னவனே எப்போது வருவாய்? என்று ஒருபோதும் கேட்டதில்லை அதைச்சொல்ல மனமிருந்தால்  நீயே சொல்  நான் வருந்துவேனில்லை என்னுயிரானவனே . . . அதிகாலையில்  வாசல் கூட்டி  முற்றத்தில் கோலமிட்டு தலைகுளித்து  கோவில் மாடம் தொழுது இருகண்ணில் ஒற்றிக்கொள்வேன்  நீ கட்டியத் தாலிக்கொடியை ஒருபோதும் சலித்துக் கொண்டதில்லை  என்னை நான், அன்றுன் கால்தொட்டு வணங்கியபோது முத்தங்களோடு ஆசிர்வதித்தாய் இன்றென் நினைவுகளும் பறக்கின்றது உன் முத்தத்திற்காக நித்திரைக்குக் கூட என் மீது வெறுப்பு உன் நினைப்பு அதற்குத் திரையிட்டிருப்பதால் எத்தனை நாளடா நான் தலையணைக்கே முத்தம் வைப்பது என்னவனே.  . . எப்போதையும் விட அன்றழகாகத் தெரிவாய் வழக்கத்துக்கு மாறாக - மெல்லிய புன்னகையும் புரிவாய் இரவு உணவு பரிமாறலும் விக்கலுக்குடனே தண்ணீரும் படுக்கையும் நீயே விரிப்பாய் அதை பார்த்துப் பார்த்து வெட்கத்தில் பூரிப்பேன் பங்குனியானாலும் சித்திரை என்றாலும் மின்னல்  என்னுள்ளேயும் ஓடும் சிலநேரம்  பகலில் பக்குவமாய் பேசுவாய் அச்சாரம் என்பதும் புரியும் அதை அறியாத பேதையாய் நானும்  உறங்குவதாய்  பாவனை செய்து சில

காலமே பதிலாகுமா

அன்று! மழை பெய்தால்  உருண்டோடும் வெள்ளம் குளம் சேரும்  இன்று!  குறுகிய மனத் தேங்கலில் தண்ணீரும் ஏக்கத்தில் கண்ணீர் விடுகிறது மக்கள் பஞ்சம் தீர்க்க தஞ்சம் தரும்  பெரும்குளம் காணாது ...!!  குடில் தோரும்  பாதை அதை மறைத்து குளம் கூட  விளை நிலமென்றாக்கி மண்ணும் விசனப்பட்டு  விம்மியழும் .... இந்த பாழ்பட்ட பூமியில் யார் வச்சக் கண்ணோ....!! தெருவெல்லாம் ... பெருவெள்ளம் ... தடைபட்டு நிற்குது...! நல் மனசெல்லாம் பேசாது பூச்சூடி போகுது இந்நிலையில் நீர்நிலைகளை எப்படி காப்பது ?  வரும் சந்ததிக்கு  இந் நிலத்தை  நலமோடெப்படி சேர்ப்பது...? ஏக்கத்தில் நீரோடு  நானும் வேரோடிப் போனேன்... செருவாவிடுதி சி.செ

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

காய்கறி கடையில் காய் பார்த்து வாங்கியதைவிட கரிசம் காட்டினாய் அதை நறுக்குவதில் கோழிக்குருமா குரும்பாட்டுக் குழம்பு நாக்கு சொட்டாங்கிப் போடும் தாயே போதுமென்றாலும் விடுவதில்லை நீ நல்லா சாப்பிடுப்பா இன்னும் ஒருவருடமோ ரெண்டு வருடமோ. . . என்றவள் குழம்பு கலக்குவதிலேயே மெய் மறப்பாள் வேதனையோடு  முகந்துடைப்பாள் கேட்டதும்  அடுத்த கவளம் அன்னம்  உள்ளிறங்க மறுக்கும் தொண்டையில் வலிக்கவே நிற்கும் அன்றையப் பொழுது ஒவ்வொரு வீடாகப் பயணம் சொல்லும் படலமாக என் பிள்ளைகளோடு  சிறு பிள்ளைபோல் நானும் குதூகலத்துடன் வீட்டுக்கு வீடு தண்ணீர் உண்ணும் உணவிலும் ஒருபிடியன்னம் விபூதியோடு கைப்பணமும் கண்ணீரோடு பயணப்படுத்துவார் பிரிய மனமின்றி சிரிப்பதா அழுவதா என்று தெரியாமலே பரிதவித்தேன் அன்று அதிகாலை 4.30 மணி விமான நிலையம் புதுமையிலும் புதுமை எனக்கது புது அனுபவம் குளு குளு அறையும் அரைகுறை தெளிவும் பார்வைக்கழகோ அழகு வீட்டு நினைவுகள் மெல்ல மறக்க நினைத்தாலும் பிறைபோல் அது வளர்வதும் தேய்வதுமே வனப்பாயிருக்கும் பேசத் தொரியாதவனை மூடு வாயையென்றதும் சிலபல நேரங்களில் ஓர் மூளையில் நின்று என்னைப் பார்த்து  ஏளனம் செய்யுமென்   மனசாட்சியு

அறம்.....

கொலைக் களத்தில் கொடியேற்றி குணம் போற்றிய  மன்னர் காலத்து வாளோடு வேலும் வலுவானத் தோளும் ஆளோடு புரவி அறைகின்றப் போரில் மண்ணோடு குருதி மடிகின்ற சமயம்  கண்ணோடு கருத்தாய் - நெஞ்சில் கள்வடி அமுதாய் சொல்லோடு பொருளை இன்னும் பலகருத்தை -காலத்தேர்பூட்டி வில்லோடு அம்பாய் தைத்திட்டார் மனத்தில் குருதி காணாது - நம் குலம் தழைக்காது என்று புலம்பியோர் பிஞ்சு நெஞ்சில்  புரையோடிக் கிடந்ததோர் பழங் கதையில் அன்பென்றும் அருளென்றும் பண்பென்றும் பகையில் லென்றும் பண்ணோடு பண்கொண்டு  ஆற்றுப் படுத்தினார் ஆம்,  அறம் சொல்லித்தந்து  - குறள் அறத்தோடு நெறிபோதித்தது வள்ளுவத்தின் திறம் உலகம்  செய்தொழில் கொண்டே செய்திட்டப் பழியை சாத்திரம் சொல்லிய  சாதியக் கறையை குறையின்றி மனக்கறையின்றி குணத்தோடும் குவளையம் போற்றும் அறத்தோடும் நெல்லும் மணியும் புல்லும் பூண்டும் சொல்லும் செயலும் செய்யும் தொழிலும் நேற்றும் இன்றும் நாளும் பொழுதும் நாகரீக குணமும் நிலைத்த தெல்லாம் வள்ளுவம் கண்ட அறத்தின் பொருளென்றால்   அது மிகையன்றோ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் செருவாவிடுதி சி. செந்தில் சுலோ

எது உன் பெருமை

கையில் கட்டிய  சாதி கயிற்றிலில்லை  உன் பெருமை நீ கல்வியில் நாட்டிய கவனத்திலும் நாளை சாதித்துக்  காட்டும் திறமையிலும் தான்  இருக்கும் உன் பெருமை 

சித்திரை நிலவே

தெற்கத்தி மேகம் தென்றலாய்த் தூவும் மேற்கத்திக் காற்றும் மேனியைத் தீண்டும் - அந்த சிற்றின்பக் கூடலும் வந்து சிந்தையில் ஆடும் - அது அற்புதம் அற்புதம் என்றே அன்பள்ளித் தூவும் அலங்காரச் சிலையென ஆரணங்கே அவதாரமென உலகாளும் அழகோடும் உயிர் கொண்ட கலையோடும் உலா வரும் ஒளியழகே - நீ ஊமை என்றானதும் ஏனோ - உன்  அளவிலா பேரழகையும் - மேகத்திரை யிலா மறைத்து வைப்பதும் சாளரம் வழி உன்னைச் சந்திக்கும் மொழியென்னை  சிந்திக்கப் போதுமின்றி - எனைநீ வந்திக்கும் நாழிகையோ - என்னுள்ளம் நிந்திக்கும் நிந்திக்குமடி உன்னை - அதுவே என்னுள் தித்திக்கும் தித்திக்குமடி கண்ணே உத்தரம் இல்லாத உன் வார்த்தையும்  உத்தரவு இல்லாது - என்  உள்ளம் புகும் மெல்ல என் இல்லம் புகும் சித்திரம் போலுள்ள  சீமாட்டியே - நீ விசித்திரம் காட்டியோ எனை ஏமாற்றுவாய் பத்தரை மாற்றுப் பொன்னே பரிசுத்த மான கண்ணே இத்தரை மண்ணில் தானே நீ வந்திறங்காததும் ஏனே அட எத்தனை மணிநேரம்  அடி சித்திரை நிலவே என் நித்திரை மறந்து உன்னை கண்டு  களிக்குமோ என் கண்ணே செருவாவிடுதி சி. செந்தில் சுலோ

முரண்பாடு. . . .

ஐந்து வயதில் மகன் தந்தையே சிறந்தவன் என்பான் மீண்டுமது,  ஐம்பதைக் கடந்தாலேப் புரியும் பதினைந்தில்,  என்ன தெரியுமென்பான் அறுபதில்  அனைத்தும் அவரேயென்பான் இருப்பத்தைந்து இளவட்டம் மாயிற்றே. . . இளம் ரத்தமும் கூட,  அது கிடக்கட்டுமென்பான் எழுபதை எட்டும்போது,  இப்போது இல்லையே. . . . இனி எப்போது காண்பேன் என் கைககளில் ஒன்று உடைந்தேப் போயிற்றே. . . . . என்று ஒப்பாரியே வைப்பான் முப்பத்தைந்தில்  இவனுக்குப்பின் பத்தில் ஒன்று,  முரண்பாடு முற்றுப்பெறாதல்லவா. . . நாற்பதில் இவன் தந்தை கண்ட அதே நிலையடைவான் பழுத்த இலை விழும்போது பச்சை இலை சிரித்தல், சிறப்போ.  . . இன்நிலை மாற்றுவோம் இனிவரும் காலத்தில் குறைகளைக் கண்டுகொள் நிறைகளை எடுத்துச்சொல் நிலைகளை புரிந்து நிதானமதை நிலை நிறுத்தி யோசித்துச் சொல்லுங்கள் யோசிக்கச் சொல்லுங்கள் தேவையானதை மட்டும் விசாரணை செய்  முதிர்ச்சியில் வார்த்தைக் குறையும் ஆயினும் முத்தாயிருக்கும் முதிர்ந்ததால் அல்ல  யோசனை உதிர்த்ததால்  தோழமையோடு கை கொடுங்கள் குடும்பம் என்பது கொடுங்கோல் ஆட்சியல்ல உங்கள் எண்ணங்களை துளையிட்டுக் கோர்க்காதீர் பிடித்திருந்தால்,  அவர்களே மாலையாக்கிக் கொள்வார்

என் நாசிக்காற்று மூச்சிறைக்கும் வரை

என் நாசிக்காற்று  மூச்சிறைக்கும் வரை என் நேசத்தாயே தமிழே உனை வணங்கித்தொழுவேன் நிதமே... வளமானத் தமிழுக்கும் வற்றாத வளமைக்கும் முற்றம் தந்து மூவாத தமிழை மொழிகளின் தாயை ஆதார மொழியை அலங்காரச் சுவையை முக்கனிச் சாராய் பருகத் தரும்  சான்றோர் நிறைந்த நிலாமுற்றமே,  தஞ்சைத் தமிழ் மன்றமே நீயே என்  முத்தமிழ் மன்றமே உமை  வணங்கித் தொடங்குவேன்  என்றுமே.... #கல்வியே வல்லதொரு ஆயுதம் இது உண்மையிலும்  பேருண்மை பொதிந்த வாக்கியம் ஆம் கற்றவர் நுணிக்கி  அறிந்த வாக்கியம் இது கற்களின் ஆயுதம் தாங்கிய  கானக வாசிகள்  கற்று தெளிந்த வாக்கியம் கம்பனை வள்ளுவனை  கடுங்கோபிகளாம் சித்தனை காலத்தழியா திருக்கச் செய்ததும் இந்த வாக்கியம் இன்று கணினியும்  கையடக்கத் கணித் திரையையும் கொண்டு வந்ததும் இந்த வாக்கியம்தான் இது பொய்யரை பொல்லாதாரை  போட்டுடைக்கும் வாக்கியம் இது உண்மையை உலகுக்கு ஓங்கியுரைக்கும் வாக்கியம் கல்வியே வல்லதோர் ஆயுதம் ஆம், இந்த   கல்வியின் சிறப்பை பெருங் காவியத்தின் அழகை மூப்பென்பது வாக்கிலும் அறியாதக் கன்னி தமிழ் மொழியில் கவிதை தேனருவியாய் தருக என்றழைப்பேன் வருக அரும்பெருங் கவியோரே அன்னைத் தமிழ் உறவானவரே  வருக

ஞாயிறு

ஞாயிறு அண்டம் முழுதும்  அழகினை விதைக்கும் ஆதித் தமிழர் இறையே வாழி திண்ணம் நிறைந்த  தீப்பிழம் பான தேவர் தலையே உயிரொளி வாழி உண்ண உணவாய்  உயிருடன் கலந்த உன்ன தமான ஒளிச்சுடர் வாழி வண்ண நிலவின்   உடன்பிறப் பாக வாய்த்த கதிரே வாய்மையே வாழி அல்லி மலரும்  அருந்தவ நிலவும்  அகத்தில் கலந்து காதலில் வீழ அல்லில் நீயே ஓய்வினை ஏற்றாய் அகிலந் தன்னில்  புகழினை ஏற்றாய்! வெள்ளி நிலவும்  விளைந்திடும் நிலமும் கொள்ளை கொள்ளும்  அழகனும் நீயே சொல்லில் அடங்காச்  சுந்தரக் கதிரே சோகம் தீர்க்கும் சூரியா வாழி! நீல வானின்   நெடும்சுடர்  நீயே நெஞ்சத் தகலா துழைப்பவன் நீயே சோலை மலர்களின்  காதலன் நீயே சோம்பல் விரட்டும்  கதிரவன் நீயே பாலை நிலமும்  பசுமையில் ஒளிர பாசம் கொண்டே  அணைப்பவன் நீயே ஓலை அனுப்பி  உன்னையே அழைப்பேன் ஒப்பே இல்லா ஒளிக்கடல் வாழி சி. செ

கல்வியே வல்லதொரு ஆயுதம்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்கள் - தமிழ்  நெஞ்சம் எல்லாம்  இலக்கியத்தின் பூக்கள் - பின்னதும் கற்றலின் பயனதை கருதாதக் காலம்- அதுசிலர்  தூற்றலால் பயந்து  ஒடுங்கிய தாகாம் -  கம்பனை வள்ளுவனை அறிந்திருந்தத் காலம்,  இருந்தும் அருந்த  உணவை வேண்டி  ஓடுயதலங் கோலம் காலமும் மெல்ல  சொல்லாமல் சொல்லும் கல்வியின் பயனால்  ஞாலமும் வெல்லும் என்பதை உணர்ந்ததோ யாரும் உணர்த்தி சென்றதோ அறியேன்.... கல்வியின் கண்கள்  காற்றுவெளி எங்கும்  தூற்றும் மழைச்சாரலாகத் தூவிச் சென்றது  தூயவர் உள்ளத்தால் பின் கற்றலால்  வந்தப் பயனென் கற்றல் ஒன்றே கலாமை  காவிய னாக்கியது  கற்றல் ஒன்றே  காலத்தாலழியா பலநூறு காவியம் படைத்ததும் கற்றல்தான் கடல்கடந்தும் ஆளும் திறன்கொடுத்தது அலெக்சாண்டருக்கு கற்றல்தான் சுந்தர் பிச்சையை  கூகுளில் சுந்தரமாக்கியது கற்றல்தான் இல்லாதாரையும் பொருள் உள்ளாராக்கியதும் கற்றல்தான் சாதிமதங்களை சமநிலை யாக்கியதும் கற்றலே காலத்தை  கடந்து நிற்கும் ஆற்றலை தரும் கற்றல்தான் ஏற்றத் தாழ்வில்லா நிலையைத் தரும் கற்றலால் கொடும்  பசிப்பிணி அறுகும் கற்றலால்  பல  போர்கொடி ஒடுங்கும் கற்றலால் தான்  இந்த வையம் விளங்கும் வையத்

புகழஞ்சலி

வரமாட்டீர்  என்று தெரியும் என்றாலும் இன்றளவும் தேடுகிறது  என் உள்ளம் அந்த  அடுக்குமொழி வார்த்தைக்கும் மெல்லிய இதழ்  சிரிப்பிற்கும் கரகரக்கும் உந்தன் காந்தக் குரல் விரிப்பிற்கும் எந்தன் உயிரையும்  உருக்கும் உந்தன் உடன்பிறப்பே என்ற அழைப்பிற்கும் ஏங்கித்தான்  நிற்கிறது  என்  ஆழ்மனமும் நீங்கள் வரமாட்டீர்  என்று தெரிந்தும் அன்று  கிழித்துப் போட்ட அந்த நாள்காட்டி மீண்டும் திரும்புமா என்று  நான்  பார்த்தபடி  ... செருவாவிடுதி  சிசெ

யாரையும் மதித்து வாழ்

உலகத்தில் உயிர்கள் இயற்கையின் படைப்பு!  அதில் ஆற்றலென்பது இலவச இணைப்பு!  பலம் கொண்டவன் மட்டும்தான் பயன்கொள்ள வேண்டுமெனில் பல்லுயிர் வாழும் பிரபஞ்சமெதற்கு ஒன்றை அடித்து  மற்றொன்று வாழும் மிருக குணத்தின் மீட்சியா மனிதன் இல்லை!  பண்பை விதைத்து பகையில்லாது வாழும் பசுந்தளிர் நெஞ்சமுடையோன் மனிதன் மனிதம் நேயம் போற்றும் நேசன் பலதும் அறிந்துணரும் ஆற்றல் எதையும் ஆழ்ந்து நோக்கும் பற்று சிலநேரம் அறிவீனம் - அது சிந்தையின் குறையா?  - இல்லை சாதியம் சிறைபட்ட அறையா ஏனிந்த நிலையும் அணிலொன்று அடிபட்டால் ஏக்கத்தோடு நின் சிந்தை சீர்குலைந்து நொந்து நூலாகிறாய் அங்கோர் காக்கை காயம் பட்டால் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை இளகிய நெஞ்சனும் இளகுவதில்லை நீ  அழகுக்கு கொடுக்கும் ஆதரவு சில உயிர்க்கு கொடுக்க மறுப்பதேன் அதைத்தான் கேட்கின்றேன்,  அடுத்த மாநிலத்தின் அவலநிலை கண்டு அள்ளிக் கொடுக்கின்றோம் ஆதரவு கரமென்று உன் அடுத்தத் தெருவில் தீயின் கோரப்பிடியில் சிக்கிய உளத்திலேற்பட்ட ரணத்திற்கேனும் மருந்தொன்று கொடுத்ததுண்டா  யோசித்துச் சொல் தானென்ற அகந்தையில் தன்மானச் சிறைதனில் அடைபட்ட புழுவாய் சிறைப்பட்ட வாழ்க்கையை இன்றே சிதைத

வணக்கம்

தாய் தமிழ் உறவுகள் எல்லலோருக்கும் வணக்கம்..