சித்திரை நிலவே

தெற்கத்தி மேகம்
தென்றலாய்த் தூவும்
மேற்கத்திக் காற்றும்
மேனியைத் தீண்டும் - அந்த
சிற்றின்பக் கூடலும் வந்து
சிந்தையில் ஆடும் - அது
அற்புதம் அற்புதம் என்றே
அன்பள்ளித் தூவும்

அலங்காரச் சிலையென
ஆரணங்கே அவதாரமென
உலகாளும் அழகோடும்
உயிர் கொண்ட கலையோடும்
உலா வரும் ஒளியழகே - நீ
ஊமை என்றானதும் ஏனோ - உன் 
அளவிலா பேரழகையும் - மேகத்திரை
யிலா மறைத்து வைப்பதும்

சாளரம் வழி உன்னைச்
சந்திக்கும் மொழியென்னை 
சிந்திக்கப் போதுமின்றி - எனைநீ
வந்திக்கும் நாழிகையோ - என்னுள்ளம்
நிந்திக்கும் நிந்திக்குமடி உன்னை - அதுவே என்னுள்
தித்திக்கும் தித்திக்குமடி கண்ணே

உத்தரம் இல்லாத
உன் வார்த்தையும் 
உத்தரவு இல்லாது - என் 
உள்ளம் புகும்
மெல்ல என் இல்லம் புகும்

சித்திரம் போலுள்ள 
சீமாட்டியே - நீ
விசித்திரம் காட்டியோ
எனை ஏமாற்றுவாய்

பத்தரை மாற்றுப் பொன்னே
பரிசுத்த மான கண்ணே
இத்தரை மண்ணில் தானே
நீ வந்திறங்காததும் ஏனே

அட எத்தனை மணிநேரம் 
அடி சித்திரை நிலவே
என் நித்திரை மறந்து
உன்னை கண்டு 
களிக்குமோ என் கண்ணே

செருவாவிடுதி
சி. செந்தில் சுலோ





Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .