Posts

Showing posts from October, 2021

நல்வழி தாரீர்

ஆண்டுக் கொருமுறை  அரும்பாடு பட்டு(ம்) வாங்கிய நாட்காட்டியை கிழிக்கும்போது தோன்றும் இந்த ஆண்டேனும்  என்வாழ்வில் இனிது கிடைக்குமா.... என்று  வருந்திடும் உள்ளத்தை வாகைசூட்டி மகிழ்ந்திடச் செய்யவேண்டி உங்கள்  மந்திர வார்த்தையில் தந்திரம் புகுத்தி சுந்தத் தமிழில் சொற்சுவை ஏற்றி மானுடவாழ்க்கையை  நன்நெறிப்படுத்த  கைத்தறி நெய்த  ஆடையைப்போலொரு  கவிதையைத் தாரீர் என்பேன் தந்திடும் கவிதையின் நற்கருத்தினை  யாவரும் ஏற்கும் வண்ணம் படைத்திடுவீர்  க, விதை  என்று அழைப்பிட்டு மகிழ்வேன்  வருக  கவித்தேன் தருக

வணக்கம்

எல்லா நிலையையும் எளிதில் கடக்கலாம்  இல்லாநிலை மட்டும் வருத்தா திருந்தால்   சொல்லாதத் துயரம் துரத்தும் காத தூரம் அது சோகக் கடலிலும் கிடத்துமே விலகாதிருந்தால்  உலகில் அல்லல் படும்  அன்றிலும் பருந்தும் அடுத்த கணமே அதிலிருந்து விடுபடும் ஆயினும் ஆறில் சிறந்து அறிவில் மூதிர்ந்து அங்கம் குலுங்கச் சிரிக்கும் மானிடர் தங்கம்தான்,  அல்லலை அன்றாடம் தன்  நெஞ்சகம் அடைகாக்கும் பொல்லா உலையை  போற்றி தினம் வாழும் இந்நிலை மாற - மானுடம்  இனிமை நிலை காண பொன்னிகர் சொல்லால் போற்றிடும் கவியால் ஏழ்மையை துரத்த  எழுத்திலிடுங்கள் எண்ணம் நற்கவியால் பாடிடுங்கள் திண்ணம்  என்றே அழைக்கிறேன் வருக வருக கவிதை தருக வண்ணமாய்  வான்மேகமாய் வாடையிளம் சோலையாய்  பூத்துக் குலுங்கும் புன்னையாய் ஒப்பாரும் மிக்காரும் இல்லா செம்மொழியின் அழகுதமிழ்  சொலெடுத்து வில்லிருந்து விலகியும்  கொண்ட இலக்கை  விலகா நெறியோடு பாடுங்கள் நற்கவிதை!  பாண்பாடுங்கள் தமிழன் அறத்தை " வணக்கம் "

எங்கே நீ

நெஞ்சோடு  நின்ற  நினைவுகள் இன்று  நஞ்சாகிப் போனது  நெஞ்சே... நம்பிய நட்பிலும் கலங்கம்  இருப்பது கண்டு நொந்தது மனம் நெஞ்சத் தனலில் வெந்தது தினம்.... என் வாழ்வில் ஒரு முறையேனும்.... அந்த மாசற்ற கர்ணனை  காணக் கிடைக்காதோ... என்ற ஏக்கத்தில்  நானும்... பெரும் தேடலில் இன்றும்...

வருக ! கவிதை தருக !!

விண்ணை முட்டும் கற்றழி கோபுரங் கட்டி எண்ணில்லா யாண்டை பின்னில் தள்ளி - இன்றும் தமிழர் நெஞ்சில் நீங்கா திடம் பிடித்த  தஞ்சை அதை தலைநகராய்க் கொண்டிட்ட தரணியாண்ட  தமிழனின் புகழை.. எங்கேயும் எப்போதும் அங்கேயும் ஆலயம் இருக்கும் அச்சிலும் கூட பேதம் பார்க்காத  அந்தப்பெரு மகனாரை நெஞ்சில் நீங்காத சொல்லெடுத்து  நித்திலமும் போற்றும் கவிதொடுத்து  கற்கண்டு தமிழை குழைத்தெடுத்து  காப்போடு யாப்பும் சேர்த்து வைத்து கலையாத அலையாய்  கவிச் சரமெடுத்து  கனலாய் காற்றாய் மணலாய் புனலாய்  மங்காத அழகாய் கோர்த்தெடுத்து  கவியரங்கம் வருக  பெருங்கவியோரே என்று அழைப்பிட்டு மகிழ்கிறேன்  வருக  கவிதை  தருக

என்ன செய்து என்ன பயன்

காலம்  சிறிதும் சிந்திக்காமல் வேதனையை வாரி  இறைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது தான் வேதனையின் உச்சம் ... சி.செ

ராஜநடை

நாட்கள் மட்டும்  எட்டுத்திக்கிலும்  எப்போதும்  ராஜநடை போடுகிறது ஆனாலும் நான், இன்றளவும்  ஏழையாகவே... சி.செ

நாடகம்

இல்லாரை உள்ளார் இழிந் துரைப்பதும் நல்லாரை நானிலம் நலிந் திருத்துவதும்,  பொல்லாத உலகத்தில் நல்லாவே நடக்குமையா... பொருள் உள்ளாரையும் பெரு முடையாரையும் அகம் விளித்திருத்தும் பொல்லாத உலகத்தில் நாடகம்  நல்லாவே நடக்குதைய்யா... சி.செ

கொரோனாவின் வெற்றி....?

நிலாமுற்றத்தின்  261 - வது  கவியரங்கம் கொரோனாவின் வெற்றி  என்ற வினாவின் விடைக்கு  விருத்தக் கவிதை  ஆயிரம் படைத்து - எமக்கு இனிய தமிழ்ச் சொல் விருந்து கொடுத்து  புரியாதச் சில புதிருக்கும் பலமானச் சில கேள்விக்கும் வளமானத் தமிழ்த் தரக்கண்டு வடிவானப் பண் சேர்த்துண்டு நான் மகிழ்வானேன் கவிமகிழ் வானே... உம்மால் நான்,  மகிழ்வானேன்  கொடுத்தத் தலைப்பில் எடுத்துத் தொடுத்தக்  கவி ஆயிரமும்  பூத்துக் குலுங்கும் பூ வண்டாடும் சோலை தேனொழுகும் பாயிரமன்று  அது அஞ்சாப்போர் மறவன் கையிருக்கும் வஜ்சிராயுதமே நெஞ்சம் நிறைந்தேன் கவி கொஞ்சமாயினும்  அதை அருந்தேன்  அது அரும் தேன் நேற்றோடு நின்றும்  என்றும் குடித்தேன்  படித்தேன்  கவிதை ஒவ்வொன்றும் படி தேன் ஓலை குடிசையில் ஓடியாடவும் இடம் இல்லாதப் போதிலும்  அன்று இன்பம் இல்லாமலில்லை இன்று ஆலை கரும்பெனக்  ஆளை வருத்தும் உடல்நோவை கொடுக்கும்  வேலை பளுவிலும் வரும் வேர்வை குளியலும் ஊதியம் தராது  உள்ளம் உறங்கவும் செய்யாது பிள்ளை பசியினில் மனம் கொள்ளை போகும்  அந்த அழுகை செலுத்தும் என் இறுதி பயணம் கொரோனாவின் கோரப்பிடியில் ஒரு வேலையுயேய் இல்லை நான் வாழ்வதிலும்  இனி வேலையில்லை 

ஞாயிறு

அண்டம் முழுதும்  அழகினை விதைக்கும் ஆதித் தமிழர் இறையே வாழி திண்ணம் நிறைந்த  தீப்பிழம் பான தேவர் தலையே உயிரொளி வாழி உண்ண உணவாய்  உயிருடன் கலந்த உன்ன தமான ஒளிச்சுடர் வாழி வண்ண நிலவின்   உடன்பிறப் பாக வாய்த்த கதிரே வாய்மையே வாழி அல்லி மலரும்  அருந்தவ நிலவும்  அகத்தில் கலந்து காதலில் வீழ அல்லில் நீயே ஓய்வினை ஏற்றாய் அகிலந் தன்னில்  புகழினை ஏற்றாய்! வெள்ளி நிலவும்  விளைந்திடும் நிலமும் கொள்ளை கொள்ளும்  அழகனும் நீயே சொல்லில் அடங்காச்  சுந்தரக் கதிரே சோகம் தீர்க்கும் சூரியா வாழி! நீல வானின்   நெடும்சுடர்  நீயே நெஞ்சத் தகலா துழைப்பவன் நீயே சோலை மலர்களின்  காதலன் நீயே சோம்பல் விரட்டும்  கதிரவன் நீயே பாலை நிலமும்  பசுமையில் ஒளிர பாசம் கொண்டே  அணைப்பவன் நீயே ஓலை அனுப்பி  உன்னையே அழைப்பேன் ஒப்பே இல்லா ஒளிக்கடல் வாழி செந்தில் சுலோ

சிறகுகள் விரித்திடு

எடுத்தது எல்லாம் தடுக்கி வீழின் அடுத்தது கூட  கை எடுத்திட மறுக்கும் இப்படியே நித்தம் பித்தம் கொண்டால் இளமையும் கூட தன்னிருப்பை மறக்கும் அது திறக்கும்  கதவைக்கூட கண் திறந்து பாராது இருக்கும் நீ அழுத்தம் கொண்டு அடிமை என்றெண்ண கொண்டு உள்ளம் இருண்ட  நிலையில் இருந்தால்  வெள்ளம் நிறைந்த இடங்கூட வெறும் பள்ளம் என்றே தோன்றும் சொல்லும் பொருளை  செவி மடுக்காவிடில் செய்யும் செயலில்  மனம் இணையாவிடிலும் இசையோடு வரும் கீதமும்  வசையேந்தி வரும் நிலையே தரும் கிளையில் ஆடும்  கொடியும் மெல்ல  பிடியை தேடி அலையும்  நீ அறிவில் சிறந்து  ஆளுமை பொதிந்தும் நிலையை மறந்தும் திரிந்தால் உன்னால் நானிலம் எப்படி விளங்கும் மெல்ல வீசும்  காற்றின் சுகத்தில் - நீ மேனி சிலிர்த்து  மெய்மறந்தது போதும் உனை தள்ள நினைக்கும்  காலத்தின் கரத்தை  எண்ணித் தொடங்கு நடை பாதையும்  ஏணியாய் மாறும் அட சிகரமென்ன சிகரம் நீ சிறகை விரித்து பறந்தால் அதுவும் கூட சுருங்கும்  சி.செ

இடிபட்ட பறவையின் கதறல்

காலம் மாறிப்போச்சு வாகனம் வேகங் கூடிப்போச்சு நாங்கள் பறந்து  திரிந்த வானங்கூட,  மனிதன் வாகனம்  ஓட்டும் இடமாச்சு.... இதில் நாங்கள் வாழ்வ தெங்கேபோய் சொல்... என்று  கேட்கும் அழகே... தெரியுமா உனக்கும் சேதி... மனிதர்க்குள்ளும் ஒருவரை சார்ந்து  ஒருவர் வாழ்ந்திட மனதொப்பாது அங்கே நித்தம் சண்டையிட்டு நொந்து சாகும்  பெரும் ஆட்டு மந்தையிது உன்னை வாகனம் இடித்ததென்றா வருத்தம்... இங்கே பெரும்  மதில்சுவரை கட்டி,  அதில் கொத்தோடு கொலைகுற்றம் செய்து அது மழை செய்தக் குற்றமென்று மலுப்பும் ஒரு பொல்லாத தேசமிது ... உன்னுள்ளம் துக்கம்  இல்லாது போநீ  விரைவில்.... உனக்கும் தொல்லை  இல்லாது போகும் அன்று மனிதமே இல்லாது போகும் ... அது,  தமக்குள்  சதி செய்து சதி செய்து  சண்டையிட்டே சாகும்..... நீ கவலை விடு... செருவாவிடுதி,  சி.செ

பல்லாங்குழி

இருவர் கூட்டில் பெருமிதம் கொள்ளும் உழவர் நாட்டின் திருப்புகழிது  இருப்பதெடுத்து சுற்றங்கொடுத்து சுகம் வாழக் கற்குமோர்  கல்விக் கூடமேயிது செருவாவிடுதி செந்தில் சுலோ

நல்லிணக்கம்

தெரியுமா... இப்போதெல்லாம் நித்திரை கூட  சித்திரை நிலவாய் அற்புதம் என்றே  வருகிறது அன்று அற்புதம் என்று  நினைத்த தெல்லாம்   இன்று நித்திரை கனவென்றே தெரிகிறது அன்பேடு பேசி - நித்தம் ஆசை வார்த்தை பூசி ஆதரவோடு இருந்த காலம் அது கருவறை பிள்ளை காதோடு உறவும்  கரிசனம் பேசும் இன்றது  காற்றோடு ஆடும் கிளையாடுங் கூட்டில் கீழ் விழுந்து அழும்  கிளிபோலே போச்சு திருவிழா என்றால் வீட்டில் விருந்தோடு  உறவும் இருந்து கதைபேசி சிரித்ததெல்லாம்  இன்று கணினித்திரையில் கைதொடும் நிலையில் உறவைச் சொல்லி  ஊராரைக் கொஞ்சும் உற்றச் சொந்தமதை  எச்சமென்றே எண்ணி தள்ளியே நின்று - நின் தறுதலை நெஞ்சும் தாண்டவமாடி நில்லும் இனியேனும் இனிமையை கொஞ்சம்  வார்த்தையில் சேர்த்து  உளிபட்ட சிலையாய் உருப்பட நினைப்போம் நெஞ்சம் மகிழ்ந்து நேர் பட பேசி சுற்றமோடும்  சுகமோடும் வாழ்ந்து வையத்தில்  நல்லிணக்கம் நாளும் வளர்ப்போம்.

கிள்ளைமொழி பேசும்பிள்ளைக்கொரு பாட்டு....

அறிவை தேட  அன்பே ஓடிவா -  வெண்மை  மலரின் இதயம்  கொண்டிடும் பிறையே .... (அறிவை) விண்ணில் தெரியும் விண்மீனெல்லாம்  கண்டு அறியும் கலையை நாடி.......    நூலோர் சொன்ன நுட்பங்கள் கேட்டு நூற்பல கோடி கற்றிட வேண்டி........    (அறிவை) வள்ளுவன் வாக்கை  நெஞ்சில் இருத்தி அறத்தின் வழியில் விலகாதிருந்தும் ........     அன்பெனும் ஆயுதம்  ஒன்றே உலகில்  அனைவரும் ஏந்தும்  மந்திரம் ஆக்கிட .....    (அறிவை) செருவாவிடுதி செந்தில் சுலோ

வேப்பந்தோப்பு குயிலே

வாடை காலத்தில் ஆடி கோடையில் வாடும்  இலையல்ல வாழ்க்கை வாழ்க்கை என்பது வேடிக்கை பொருளா ? சோம பாணத்தில் வார்த்தை வாள்வீசி போவதிங்கு வீரத்தின் மருளா அந்தியில் திரும்பும் அன்றிலும் பருந்தும்  அமைதியாய் போவது  அச்சத்தின் பொருளா உண்ட மிச்சத்தில் கொஞ்சம் கூட்டினுள் ஊட்டிட வேண்டி அலகிடை சுமக்கும்  அதையெண்ணு மனிதா கடினத்திலும் கடினம் உன்னுழைப்பு அறிவேன் உன் உடலுலைத் தலுப்பு மாற கள்ளுண்டு நீயும்  கால் தட்டி இடறி இடைகட்டு மறந்து பொடி தட்டி போவாய் நீ சிறுக சிறுக சேர்த்து வைத்த  மானத்தோடு சேர்ந்து  மதிமயங்கிப் போவாய் பிடிவிட்ட கொடியாய்  திசைகெட்டு போவாய் பசிக்கு மருந்தில்லாது ருசிக்கும் வழியில்லாது படுத்துறங்கும் பாயில் உன் முகவரி சொல்லும் நீன்பெற்றப் பிஞ்சு குழவிகள் தெருவில் வேப்பந்தோப்பு குயிலே - உன் வேலை இதுவல்லத் தளிரே சாலையில் உறங்கும் தளிரும் கல்விச் சாலையில் பயிலும் அதுவுன் தெளிவில்தான் அட ஆலயம் இருக்கும் பொருளும் உன் சிந்தயில் சிவமாய் தெளியும் அந்திமாலை வந்ததும் மயக்கும் இது மதுவல்ல... உந்தன் மைவிழியாள் மனத்தால் தந்திடும் சொர்க்கம் மதுமட்டுமா இனிக்கும் வேப்பந்தோப்பு குயிலே,  வேம்பம் பூவிலும்

புத்தகம்

புத்தகம் அதொரு போதிமரம் படித்தவன்  அதை ஏணியாக்கி (யும்) கொள்கிறான்,  ஞானியாகி(யும்) வெல்கிறான் படிப்பில்லாதவனோ.. சாமானியனாகவே நிற்கிறான்.... சாமானியன்  சி.செ

தமிழோடு வேண்டுவேன் என்றே கொட்டு முரசே!

கொடுத்துதவும் பண்பு  தமிழர்கது வென்றும் தெம்பு இது அன்று,   இன்று கொடுப்பது மறந்தார் எடுப்பதால் நிறைந்தார் - அதில் உன்னையும் சாட்சியாய் புனைந்தார் பண்பாடு மறந்த  பாதகர் நெஞ்சில் பகைமை போற்றும் பண்பில்லார் தனில் நீதியின் எதிரே  நில்லென்ற சொல்லால் தீமைக்கு உம்மை  சாட்சியாய் வைப்பார் தமிழே  தீமைக்கு உம்மை  சாட்சியாய் வைப்பார் மயக்கமேன் தமிழே! உனக்கும் தயக்கமேன் குற்றமும் புலமையாய் கண்டு புன்னகை மாற்றவும் மறந்து காகித மடிப்பில் நீர் மறுதலித்து நின்றாயோ -   தமிழே!! குற்றம் அரங்கேற - நெஞ்சம் குறுகுறுத்து நின்றாயோ உன்னுள் தேன்தமிழ் சாரமும் தீஞ்சொல் வீரமும்  உண்டென அறிவேன் என்றே கொட்டு முரசே !!   தமிழே !! சுயமாய் நீயும் எழுந்து சுட்டெரிக்கக் கூடாதோ வஞ்சகம் நெஞ்சுடைய நெஞ்சகம் சுட்டெரிக்கக் கூடாதோ ஆளுமை அதிகாரம் அதுவும் அடி பிரளக்கூடாதோ தமிழே , உன் கரம் பட்டால் உயிர்த்தெழுவோம் நாங்கள் என்றே கொட்டு முரசே தன்னுடல் தேய வாசம் தரும் சந்தனமும் தன்னுள் சொல்லால் தன்னை உயர்த்தும் தமிழும் தரத்தில் ஒன்றென்பேன் -  தமிழதன் குணத்தில் மேலென்பேன்  நீயதை கொட்டு முரசே !!   எட்டுத்திக்கும் கொட்டும் முரசே எங்கள் தம

உரிமை மீட்பு

பல்லவர்கள் காலத்திற்கு முன்பு விநாயகர் சதுர்த்தி இல்லை..! சோழர்கள் காலத்திற்கு முன்பு  தீபாவளி இல்லை..! மொகலாயர்கள் வருகைக்கு முன்பு ரம்ஜான் பண்டிகை இல்லை...! ஐரோப்பியரின் வருகைக்கு முன்பு கிறிஸ்துமஸ்  இல்லை..! 100 வருடங்களுக்கு முன்பு  ஆயுத பூஜையுமில்லை...! 50 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலப்புத்தாண்டு மில்லை...! 25 வருடங்களுக்கு முன்பு  காதலர் தினம்  கொண்டாடப்பட்டது இல்லை..! இதில் எதற்குமே  தடை விதிக்காத நீதிமன்றம், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏறுதழுவுதல்  சல்லிகட்டு எருது கட்டு எருது ஓட்டம்  மஞ்சுவிரட்டுக்குத் தடை விதிக்கிறது...! பாரம்பரியம் என்பதற்காக  அனுமதிக்க முடியாது  என்கிறது சுப்ரீம் கோர்ட் ...!  பாரம்பரியம் என்பதிலும் ! வழக்கம் என்பதிலும்  ! மாற்றுக் கருத்தில்லையே ! இரண்டும் ஒரு பொருள்தானே ? அப்படியெனில், கொலைக்கு தண்டனை தூக்கென்றால்! இதுவும் வழக்கம் தானே ? இது மட்டும் தகுமோ ? பாரம்பரியம் ! அது குழிதோண்டி  புதைக்கப்பட வேண்டிய  செயலென்றால் ! சட்டதிட்டங்கள் மொத்தமும்   தீ யிட்டு கொழுத்தும்  தருணமிதுவா ? பழமை ! அதுதானே பாரம்பரியம்  என்பதெனில் ... கோவிலும் தேவாலயமும்  மரஞ்செடியும் ம

மகாத்மா

நான் வரைந்த ஓவியத்தில் மின்னும்  உன் புன்னகை சொல்லு(ம்)மோ விடுதலை  சுகத்தின் சுகம் இன்றும்  அறியாதார் கோடி கோடி என்று அடியேன் வணங்குவேன்  என்றும் உனை நாடி நாடி என்பேன் அன்பெனும் ஆயுதமேந்தி அகிம்சையை முன்னிருத்தி அகிலத்தில் இதையும் முன்னெடுத்து அறத்தின் வலிமையோடு  வாங்கிய சுதந்திரம் அதுவின்று சிலரின் சுகம்பேணும்  அரிதாரம் என்றானது மாத்திரம் இனியேனும் உன் எண்ணம் மின்னுமா இல்லை அதன் எதிர்திசை ஒளிருமா எல்லோருக்கும் விடுதலை என்றெண்ணும் உன்போல் எண்ணம்  இனியேனும் மண்ணகம் பூக்குமா மக்கள் நலம் பேனுமா என்ற கேள்வியோடு  நித்தம் என் பயணம் வாழ்க நின் புகழ் என்றே வணங்குவேன் என்றும் சி.செ செருவாவிடுதி 

புதியதோர் உலகு செய்வோம்

கவிஞனின்  எழுதுகோலுக்கு  ஒரு வேலை...  அறியாமையை  விரட்டு நீ  அந்திமாலை ..