மகாத்மா

நான் வரைந்த
ஓவியத்தில் மின்னும் 
உன் புன்னகை சொல்லு(ம்)மோ

விடுதலை 
சுகத்தின் சுகம்
இன்றும் 
அறியாதார் கோடி கோடி என்று

அடியேன் வணங்குவேன் 
என்றும் உனை நாடி நாடி என்பேன்

அன்பெனும் ஆயுதமேந்தி
அகிம்சையை முன்னிருத்தி

அகிலத்தில் இதையும் முன்னெடுத்து
அறத்தின் வலிமையோடு 
வாங்கிய சுதந்திரம்

அதுவின்று சிலரின் சுகம்பேணும் 
அரிதாரம் என்றானது மாத்திரம்

இனியேனும் உன் எண்ணம் மின்னுமா
இல்லை அதன் எதிர்திசை ஒளிருமா

எல்லோருக்கும் விடுதலை
என்றெண்ணும் உன்போல் எண்ணம் 

இனியேனும் மண்ணகம் பூக்குமா
மக்கள் நலம் பேனுமா

என்ற கேள்வியோடு 
நித்தம் என் பயணம்

வாழ்க நின் புகழ்
என்றே வணங்குவேன் என்றும்

சி.செ
செருவாவிடுதி 

Comments

Popular posts from this blog

பருவம் கடத்தும் வறுமை

சொல்லாடல்

சீர்வரிசை