Posts

உலகத்தின் இயல்பு

எப்போதும்   இங்கிது போல்  நடந்ததில்லை என்போம்  மனத் துக்கம் தாழா துயரத்தில் நிற்போம் இதுதான் நான் கண்ட  துயரத்திலும், துயரம் பெருந்துயரம் என்போம் #இது விபத்து நடக்குமிடம்,  நிமிடத்திற்கு ஒருமுறை அலறி வரும் ஊர்தி  அதில் பதறிய மனதோடும்  உதறிய கை யோடும் உருக்குலைந்து வந்தால் மருத்துவமனையில்,  பத்தில் நாம் ஒன்றெனத் தோன்றும் #இதுதான் உலகத்தில் மானுடர் துன்பமும் , சந்திக்கும் இன்னலும்  #தன்னை மட்டும் பார்த்தால்  துயரத்தின் உச்சம் பரந்துபட்டு பார்த்தால் ... பார்த்ததில் நாம்,  மிச்சத்தில் மிச்சம் .. செருவாவிடுதி, சி.செ

சரங்கொன்னைப் பூவே

வசந்தத்தின் வரவே - இன்பதில்  வந்துதித்த மலரே வாழ்கையில் இன்னலை - அக வேர்களுக்கு கொடுத்துவிட்டு - புறம் மலர்ந்து சிரிக்கும் பூக்களே வாய்பேசா புத்தனே!  சரங்கொன்னையே!! பேரின்பம் என்றே பெருஞ்சுமை ஏற்கிறார் மானுடர் பெருமை வேண்டியே வெறுமையில் தவிக்கிறார் மரக்கிளையின் அழகைப்போல் உறவினிமை தெரியாது நித்தம் பிதற்றுகிறாரவர்.  .  . செருவாவிடுதி : சி.செ

தியாகம்

தியாகம் எனும்  இந்த வார்த்தையோடு வழக்கிட்டப் பெரும் சாணக்கியர் பலரையும்  பார்த்திருக்கிறேன் வழக்கோடும்..., சிலநேரம் என் வாய்சுமந்த வசவோடும்... ஈன்ற சிசுவை மடிசுமந்து மார்கொடுக்கும் மாண்பு அது உயிர்களுக்கு  கிடைத்தத் தெம்பு... எனில்,  தியாகம் என்பதெது...? ஆம் உண்மை தியாகத்தை,  நான் நேரில் பார்த்தேன்...! பார்த்து வியந்தேன்...!! விபத்தில் சிக்குண்டவர் இரத்த வெள்ளத்தில் தன்னிலை மறந்து உடல் சிதையுற்றும்  பேச்சும் மூச்சும் மூத்திரபோக்கும்  போவதறியாது கிடக்குகையில் சிறு பிள்ளையை எடுத்துப் பேணுவதுபோல் அவரிடத்து கரிசனம் காட்டும் அவர்தம் சிநேகிதரிடமும்,  உற்ற சில உறவினரிடமும் பேரன்பு  இணையரிடமும்,  தான்பெற்ற மகவிடமும்  அதை பார்த்து வியந்தேன்...!! பார்த்தால்... கலங்காத கண்ணும்  கண்ணீர் சிந்தும்...!! ஆம் நானே அழுதேன் என்றால் பாருங்களே.... செருவாவிடுதி சி.செ

பருவம் கடத்தும் வறுமை

பெண்  கால்சதங்கை யோசையில் கண் மயங்கும் கதிரவன்    மண்குடத்தோடு நாணம்  நடைபோட்டு நானும்    முப்பதைக் கடந்துமென்னில் முல்லை வாசமும்  முன்நெற்றிக் குங்குமமும்  ஏதோர் மார்பில்   ஏந்திட ஆளில்லை . . .  நல்லோர் நாளில்லை . . .   தாமரைக் குளத்தில்  தாவணிச் சேலையில்  தண்ணீர் தீண்டாமல் ஏந்தினாள் . . . தாழை முழங்கால் மட்டம் நனைந்திட    இலைகளின் இடையில் மெல்ல அலைமோதி குடத்தில்,  தெளிந்த நீரெடுத்து   மெல்லிய இடையெனும்  மேனியில் வைத்து குளத்தோடு,  சொல்லாமல் கொள்ளாமல்  நகர்ந்தாள் நங்கை    நீருக்குள் காத்திருந்த கரியஉரு காலை வருடி  சோலையிவளை  வசமாக பிடித்திட    திடுக்கிட்டவள்  சட்டென மயங்கி  பட்டென விழுந்தாள்    வாய்ச்சொல் ஓசையின்றி  ஓராயிரம் ஆசையில்  பெரும் போரட்டத்தோடுமொரு பேடை மனத்தோடும்   இதை கொடுமை என்றே கொட்டுவதோ  கொலைக்குற்றமென்றே கத்துவதோ    நங்கை  கக்கத்தில் வைத்த குடம் கொட்ட   கொட்டிய நீரில்  சித்திரம் இவளானாள்   காரிருளும் கருணையின்றி  முன்னேறி அங்கத்தில் ஒரு கை  ஆடை முடிப்பிலும் மறு கை ஆங்காங்கே பலமுறை  தொட்டது மட்டும்    கொட்டாமல் நீங்கிச் சென்றான் கெட்டவன்    மிச்சத்தில்  நெடுநேரம் கடந்து

பிழை

யாரைச் சொல்லி நோவது யாரால் வந்த நோயிது இயற்கையின் படைப்பின் தோற்றம் எல்லாம் சரி நிகரென்றால் - எம்  உளத்தை உரமோடு வைத்து மேனியில் குறைவைத்தது என்ன நியாயம் பத்துபேர் மத்தியில் பசுமையாய் நின்றபோதும் - என்மேல் பரிதாபப் பார்வையேன்... கனிகளின் சுவையும் கருங்குயிலின் இசையும் படைத்தது இறைவனென்றே அதைப் பார்த்துப் பார்த்து வியந்திருப்பார் ஓடும் நீரிலும் நீரோடிக்குதிக்கும் கயல்தனையும் மேயும் புள்ளினமும் இசையும் வண்டினமும் இயற்கையின் கொடையென்பார் சிறப்பாய் படைத்தது இறைவனென்பார் அதை எண்ணி யெண்ணி வியந்திருப்பார் என்  சிந்தையிலும்  சிகரம் தொடும் முனைப்பு உள்ளதறியாத மூடர்கள் . . . அங்கோர் தடைபோடவே நின்றிடுவார் இறைவனோ  இயற்கையோ அவர் படைப்பில் நல்லதைப் போற்றும் அறிவிலி அல்லாததை தூற்ற மறப்பதேன்  உளம் அஞ்சி மறுப்பதேன் இத்தனைக் குறையோடு சுயமற்றென்னை படைத்தோன் இறைவனென்றால்  சத்தியம் சொல்வேன் நித்தமும் . . .  அவன்பேர் நித்திப்பேன் என்நெஞ்சத்து உரத்தோடு உலகில் நானும்  வாகைசூடுவேன் செருவாவிடுதி : சி.செ

பாரதியே மீண்டும் வா . . .

பாரதியே ...! நீ ரௌத்திரம் பழகென்றாய்   நெஞ்சம் புடைத்து  நேர்பட பேசென்றாய்    மூச்சு விடவே முணங்கும் நாட்டில் பேச்சுரிமைக்கு எங்கே போவோம்   எங்கள் தலைமுறையும் எங்ஙனம் வாழும்   வந்துவிடு பாரதியே  ரௌத்திரம் பழகி  தந்துவிடு பாரதியே     அந்நியர் ஆண்ட பூமியிலும்  அனல் வார்த்தை வீசியே   வலம் வந்தாய்     இன்று  நம்மவர் ஆளும் போதினிலும்   நலம் கோரும் வார்த்தையே  தீதென்றார்    நெஞ்சம் புடைத்து   நேர்பட பேச  பாரதியே நீ வேண்டும் - எமக்கும் ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும்    விந்தை உலகத்தில் சந்தைப் பொருளாகிப்போன பழம் பெரும் பண்ணாடு - இது பாழாகும் திருநாடு   நெஞ்சம் புடைத்து   நேர்பட பேச  பாரதியே நீ வேண்டும் - எமக்கும் ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும்  இது கலவரப் பூமியில்லை கார்பன் வாய்வால் வந்த தொல்லை எங்கள் கழனியும் கருகும் நிலை   அதுவே கர்ப்பமும் கலைக்கும் உலை இது அணுவுலை களம் ஒரு அவசர யுகம் இதில்  சமைத்துண்ண நெகிழியும் சதை வேக மின்களனும் எளிமையிலோர் புதுமையாம்!  இது புதியாதோர் மடமையாம் !!    நெஞ்சம் புடைத்து   நேர்பட பேச  பாரதியே நீ வேண்டும் - எமக்கும் ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும்  நம்மில் சடுதியி

இதுதான் விதியா...

எப்பவருவான்னு கேட்ட  உசுரு எட்ட நின்னு பாக்குமா   என் துக்கம் தாங்கிட தோள்கொடுத்து நிக்குமா    பசித்தழும் போதும்  பாசத்தில் விளித்தபோதும் அம்மா என்றே வரும்   நெடுங்காலமாய்  மறந்ததேனோ உள்ளம் ,  அப்பா என்பதை    என்றாலும்  அது நினைத்து  வருந்தாத  மனசு   எனை எப்போதும்  வெறுக்காத உசுரு   என்னைப்   பிரிந்திட அழுததோ    என்   பிரிவை எண்ணி  துடித்ததோ    திருவிழா திடலெல்லாம்  தோள்சுமந்து நடந்து   எனைக்காக்க  தூங்காத உசுரு    தூங்கும் எனைத்தூக்கித் திரும்பும்    அந்த தளிர்போன்ற மனசு    இன்று உயிரற்றுகிடக்கே    நான் வந்ததை  உணர்ந்து பார்க்குமா    என் வேதனை  எண்ணித் துடிக்குமா     நல்லிரவில்  தூங்கிப்போனாலும்    என் தும்மல்  சத்தத்தில் துடித்தெழுவார்    குரல் கேட்டு நெஞ்சம்  துடித்திடுவார்    நான் அழுது புலம்புறேனே  இன்று  இப்படி கிடப்பதேனோ . . .   கண்ணில் தூசு  பட்டாலும் துடிப்பார்    மண்ணில்  பாதம்  பட்டாலும் விளிப்பார்    நான் கலங்கியழுகிறேனே காரணந்தாங் கேட்பாரோ   விளக்கு வைக்கும் வேளை விட்டில் பூச்சியோடு  விளையாடி சுடுபட்டு கத்தினாலும்,  வேதனை அவருக்கே வெறும் வார்த்தை மட்டும்   அதட்டலுக்கு   சு