இதுதான் விதியா...

எப்பவருவான்னு கேட்ட  உசுரு
எட்ட நின்னு பாக்குமா
 
என் துக்கம் தாங்கிட
தோள்கொடுத்து நிக்குமா 
 
பசித்தழும் போதும் 
பாசத்தில் விளித்தபோதும்
அம்மா என்றே வரும்
 
நெடுங்காலமாய் 
மறந்ததேனோ உள்ளம் , 
அப்பா என்பதை 
 
என்றாலும் 
அது நினைத்து 
வருந்தாத  மனசு
 
எனை எப்போதும் 
வெறுக்காத உசுரு
 
என்னைப்  
பிரிந்திட அழுததோ 
 
என்  
பிரிவை எண்ணி 
துடித்ததோ 
 
திருவிழா திடலெல்லாம் 
தோள்சுமந்து நடந்து
 
எனைக்காக்க 
தூங்காத உசுரு 
 
தூங்கும் எனைத்தூக்கித் திரும்பும் 
 
அந்த
தளிர்போன்ற மனசு 
 
இன்று
உயிரற்றுகிடக்கே 
 
நான் வந்ததை 
உணர்ந்து பார்க்குமா 
 
என் வேதனை 
எண்ணித் துடிக்குமா 
 
 நல்லிரவில் 
தூங்கிப்போனாலும் 
 
என் தும்மல் 
சத்தத்தில் துடித்தெழுவார் 
 
குரல் கேட்டு நெஞ்சம் 
துடித்திடுவார் 
 
நான் அழுது புலம்புறேனே 
இன்று 
இப்படி கிடப்பதேனோ . . .
 
கண்ணில் தூசு 
பட்டாலும் துடிப்பார் 
 
மண்ணில் 
பாதம் 
பட்டாலும் விளிப்பார் 
 
நான்
கலங்கியழுகிறேனே
காரணந்தாங் கேட்பாரோ
 
விளக்கு வைக்கும் வேளை
விட்டில் பூச்சியோடு 
விளையாடி

சுடுபட்டு கத்தினாலும், 
வேதனை அவருக்கே

வெறும் வார்த்தை மட்டும்  
அதட்டலுக்கு
 
சுடுபட்ட விரலெடுத்து 
மடிமீது தான் வைத்து
 
கதைசொல்லி 
தேற்றுவார்
 
இன்று 
கடுந்தனலில் 
வேகுவாரோ
 
வெந்தனலை 
தாங்குவாரோ 
 
என்செய்து நான் தேறுவேன்
எப்படி நான் தாங்குவேன் 

இது 
விதியென்பதா 
வாழ்வின் சதியென்பதா 
 
எதைச்சொல்லி நோக -நான்
எதைச்சொல்லி நோக
  
பாசத்தோடு பாசம் 
பண்போடு கொடுத்த, 
 
நேசத்தின் உள்ளமெனை
நோகவைத்தும் சென்றதேன் 

உயிரோடு என்னை
வேகவைத்து சென்றதேன் . . .

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

சொல்லாடல்

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை