தியாகம்
தியாகம் எனும்
இந்த வார்த்தையோடு
வழக்கிட்டப்
பெரும்
சாணக்கியர் பலரையும்
பார்த்திருக்கிறேன்
வழக்கோடும்...,
சிலநேரம் என் வாய்சுமந்த
வசவோடும்...
ஈன்ற சிசுவை
மடிசுமந்து மார்கொடுக்கும் மாண்பு
அது உயிர்களுக்கு
கிடைத்தத் தெம்பு...
எனில்,
தியாகம் என்பதெது...?
ஆம்
உண்மை தியாகத்தை,
நான் நேரில் பார்த்தேன்...!
பார்த்து வியந்தேன்...!!
விபத்தில் சிக்குண்டவர்
இரத்த வெள்ளத்தில்
தன்னிலை மறந்து
உடல் சிதையுற்றும்
பேச்சும் மூச்சும்
மூத்திரபோக்கும்
போவதறியாது கிடக்குகையில்
சிறு பிள்ளையை எடுத்துப் பேணுவதுபோல்
அவரிடத்து கரிசனம் காட்டும்
அவர்தம் சிநேகிதரிடமும்,
உற்ற சில உறவினரிடமும்
பேரன்பு இணையரிடமும்,
தான்பெற்ற மகவிடமும்
அதை பார்த்து வியந்தேன்...!!
பார்த்தால்...
கலங்காத கண்ணும்
கண்ணீர் சிந்தும்...!!
ஆம்
நானே அழுதேன்
என்றால் பாருங்களே....
செருவாவிடுதி
சி.செ
Comments
Post a Comment