சிறகுகள் விரித்திடு

எடுத்தது எல்லாம்
தடுக்கி வீழின்
அடுத்தது கூட 
கை எடுத்திட மறுக்கும்

இப்படியே நித்தம்
பித்தம் கொண்டால்
இளமையும் கூட
தன்னிருப்பை மறக்கும்

அது திறக்கும் 
கதவைக்கூட
கண் திறந்து பாராது இருக்கும்

நீ அழுத்தம் கொண்டு
அடிமை என்றெண்ண கொண்டு

உள்ளம் இருண்ட 
நிலையில் இருந்தால் 

வெள்ளம் நிறைந்த இடங்கூட
வெறும் பள்ளம் என்றே தோன்றும்

சொல்லும் பொருளை 
செவி மடுக்காவிடில்
செய்யும் செயலில் 
மனம் இணையாவிடிலும்

இசையோடு வரும் கீதமும் 
வசையேந்தி வரும் நிலையே தரும்

கிளையில் ஆடும் 
கொடியும் மெல்ல 
பிடியை தேடி அலையும் 
நீ
அறிவில் சிறந்து 
ஆளுமை பொதிந்தும்
நிலையை மறந்தும் திரிந்தால்
உன்னால்
நானிலம் எப்படி விளங்கும்

மெல்ல வீசும் 
காற்றின் சுகத்தில் - நீ
மேனி சிலிர்த்து 
மெய்மறந்தது போதும்

உனை தள்ள நினைக்கும் 
காலத்தின் கரத்தை 
எண்ணித் தொடங்கு
நடை பாதையும் 
ஏணியாய் மாறும்

அட சிகரமென்ன சிகரம்
நீ சிறகை விரித்து பறந்தால்
அதுவும் கூட சுருங்கும் 


சி.செ

Comments

Popular posts from this blog

உலகத்தின் இயல்பு

பருவம் கடத்தும் வறுமை

பிழை