வணக்கம்

எல்லா நிலையையும்
எளிதில் கடக்கலாம் 
இல்லாநிலை மட்டும்
வருத்தா திருந்தால்
 
சொல்லாதத் துயரம்
துரத்தும் காத தூரம்
அது சோகக் கடலிலும்
கிடத்துமே விலகாதிருந்தால் 

உலகில்
அல்லல் படும் 
அன்றிலும் பருந்தும்
அடுத்த கணமே
அதிலிருந்து விடுபடும்

ஆயினும்
ஆறில் சிறந்து
அறிவில் மூதிர்ந்து
அங்கம் குலுங்கச் சிரிக்கும்
மானிடர் தங்கம்தான், 

அல்லலை அன்றாடம் தன் 
நெஞ்சகம் அடைகாக்கும்
பொல்லா உலையை 
போற்றி தினம் வாழும்

இந்நிலை மாற - மானுடம் 
இனிமை நிலை காண
பொன்னிகர் சொல்லால்
போற்றிடும் கவியால்
ஏழ்மையை துரத்த 
எழுத்திலிடுங்கள் எண்ணம்
நற்கவியால் பாடிடுங்கள் திண்ணம் 
என்றே அழைக்கிறேன் வருக வருக
கவிதை தருக

வண்ணமாய் 
வான்மேகமாய்
வாடையிளம் சோலையாய் 
பூத்துக் குலுங்கும் புன்னையாய்

ஒப்பாரும் மிக்காரும் இல்லா
செம்மொழியின் அழகுதமிழ் 
சொலெடுத்து

வில்லிருந்து விலகியும் 
கொண்ட இலக்கை 
விலகா நெறியோடு
பாடுங்கள் நற்கவிதை! 
பாண்பாடுங்கள் தமிழன் அறத்தை
" வணக்கம் "

Comments

Popular posts from this blog

உலகத்தின் இயல்பு

பாரதியே மீண்டும் வா . . .

பருவம் கடத்தும் வறுமை