வருக ! கவிதை தருக !!

விண்ணை முட்டும்
கற்றழி கோபுரங் கட்டி
எண்ணில்லா யாண்டை
பின்னில் தள்ளி - இன்றும்

தமிழர் நெஞ்சில்
நீங்கா திடம் பிடித்த 
தஞ்சை அதை
தலைநகராய்க் கொண்டிட்ட
தரணியாண்ட 
தமிழனின் புகழை..

எங்கேயும் எப்போதும்
அங்கேயும் ஆலயம்
இருக்கும் அச்சிலும் கூட
பேதம் பார்க்காத 
அந்தப்பெரு மகனாரை

நெஞ்சில் நீங்காத
சொல்லெடுத்து 
நித்திலமும் போற்றும்
கவிதொடுத்து 

கற்கண்டு தமிழை
குழைத்தெடுத்து 
காப்போடு யாப்பும்
சேர்த்து வைத்து

கலையாத அலையாய் 
கவிச் சரமெடுத்து 
கனலாய் காற்றாய்
மணலாய் புனலாய் 
மங்காத அழகாய்
கோர்த்தெடுத்து 

கவியரங்கம் வருக 
பெருங்கவியோரே என்று
அழைப்பிட்டு மகிழ்கிறேன் 
வருக 
கவிதை 
தருக

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .