எப்போதும் இங்கிது போல் நடந்ததில்லை என்போம் மனத் துக்கம் தாழா துயரத்தில் நிற்போம் இதுதான் நான் கண்ட துயரத்திலும், துயரம் பெருந்துயரம் என்போம் #இது விபத்து நடக்குமிடம், நிமிடத்திற்கு ஒருமுறை அலறி வரும் ஊர்தி அதில் பதறிய மனதோடும் உதறிய கை யோடும் உருக்குலைந்து வந்தால் மருத்துவமனையில், பத்தில் நாம் ஒன்றெனத் தோன்றும் #இதுதான் உலகத்தில் மானுடர் துன்பமும் , சந்திக்கும் இன்னலும் #தன்னை மட்டும் பார்த்தால் துயரத்தின் உச்சம் பரந்துபட்டு பார்த்தால் ... பார்த்ததில் நாம், மிச்சத்தில் மிச்சம் .. செருவாவிடுதி, சி.செ
பாரதியே ...! நீ ரௌத்திரம் பழகென்றாய் நெஞ்சம் புடைத்து நேர்பட பேசென்றாய் மூச்சு விடவே முணங்கும் நாட்டில் பேச்சுரிமைக்கு எங்கே போவோம் எங்கள் தலைமுறையும் எங்ஙனம் வாழும் வந்துவிடு பாரதியே ரௌத்திரம் பழகி தந்துவிடு பாரதியே அந்நியர் ஆண்ட பூமியிலும் அனல் வார்த்தை வீசியே வலம் வந்தாய் இன்று நம்மவர் ஆளும் போதினிலும் நலம் கோரும் வார்த்தையே தீதென்றார் நெஞ்சம் புடைத்து நேர்பட பேச பாரதியே நீ வேண்டும் - எமக்கும் ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும் விந்தை உலகத்தில் சந்தைப் பொருளாகிப்போன பழம் பெரும் பண்ணாடு - இது பாழாகும் திருநாடு நெஞ்சம் புடைத்து நேர்பட பேச பாரதியே நீ வேண்டும் - எமக்கும் ரௌத்திரம் சொல்லித்தர வேண்டும் இது கலவரப் பூமியில்லை கார்பன் வாய்வால் வந்த தொல்லை எங்கள் கழனியும் கருகும் நிலை அதுவே கர்ப்பமும் கலைக்கும் உலை இது அணுவுலை களம் ஒரு அவசர யுகம் இதில் சமைத்துண்ண நெகிழியும் சதை வேக ...
Comments
Post a Comment