இடிபட்ட பறவையின் கதறல்
காலம் மாறிப்போச்சு
வாகனம் வேகங் கூடிப்போச்சு
நாங்கள் பறந்து
திரிந்த வானங்கூட,
மனிதன் வாகனம்
ஓட்டும் இடமாச்சு....
இதில் நாங்கள்
வாழ்வ தெங்கேபோய் சொல்...
என்று
கேட்கும் அழகே...
தெரியுமா உனக்கும் சேதி...
மனிதர்க்குள்ளும்
ஒருவரை சார்ந்து
ஒருவர் வாழ்ந்திட மனதொப்பாது
அங்கே
நித்தம் சண்டையிட்டு
நொந்து சாகும்
பெரும் ஆட்டு மந்தையிது
உன்னை வாகனம்
இடித்ததென்றா வருத்தம்...
இங்கே பெரும்
மதில்சுவரை கட்டி,
அதில் கொத்தோடு கொலைகுற்றம் செய்து
அது மழை செய்தக் குற்றமென்று
மலுப்பும் ஒரு
பொல்லாத தேசமிது ...
உன்னுள்ளம் துக்கம்
இல்லாது போநீ
விரைவில்....
உனக்கும் தொல்லை
இல்லாது போகும்
அன்று
மனிதமே இல்லாது போகும் ...
அது,
தமக்குள்
சதி செய்து
சதி செய்து
சண்டையிட்டே சாகும்.....
நீ கவலை விடு...
செருவாவிடுதி,
சி.செ
Comments
Post a Comment