நல்லிணக்கம்

தெரியுமா...

இப்போதெல்லாம்
நித்திரை கூட 
சித்திரை நிலவாய்
அற்புதம் என்றே  வருகிறது

அன்று
அற்புதம் என்று 
நினைத்த தெல்லாம்
 
இன்று
நித்திரை கனவென்றே தெரிகிறது

அன்பேடு பேசி - நித்தம்
ஆசை வார்த்தை பூசி
ஆதரவோடு இருந்த காலம்

அது கருவறை பிள்ளை
காதோடு உறவும் 
கரிசனம் பேசும்

இன்றது 
காற்றோடு ஆடும்
கிளையாடுங் கூட்டில்
கீழ் விழுந்து அழும் 
கிளிபோலே போச்சு

திருவிழா என்றால்
வீட்டில் விருந்தோடு 
உறவும் இருந்து கதைபேசி
சிரித்ததெல்லாம் 

இன்று கணினித்திரையில்
கைதொடும் நிலையில்
உறவைச் சொல்லி 
ஊராரைக் கொஞ்சும்

உற்றச் சொந்தமதை 
எச்சமென்றே எண்ணி
தள்ளியே நின்று - நின்
தறுதலை நெஞ்சும்
தாண்டவமாடி நில்லும்

இனியேனும்
இனிமையை கொஞ்சம் 
வார்த்தையில் சேர்த்து 
உளிபட்ட சிலையாய்
உருப்பட நினைப்போம்

நெஞ்சம் மகிழ்ந்து
நேர் பட பேசி
சுற்றமோடும் 
சுகமோடும் வாழ்ந்து

வையத்தில் 
நல்லிணக்கம்
நாளும் வளர்ப்போம்.






Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .