உரிமை மீட்பு
பல்லவர்கள் காலத்திற்கு முன்பு விநாயகர் சதுர்த்தி இல்லை..!
சோழர்கள் காலத்திற்கு முன்பு
தீபாவளி இல்லை..!
மொகலாயர்கள் வருகைக்கு முன்பு ரம்ஜான் பண்டிகை இல்லை...!
ஐரோப்பியரின் வருகைக்கு முன்பு கிறிஸ்துமஸ் இல்லை..!
100 வருடங்களுக்கு முன்பு
ஆயுத பூஜையுமில்லை...!
50 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலப்புத்தாண்டு மில்லை...!
25 வருடங்களுக்கு முன்பு
காதலர் தினம்
கொண்டாடப்பட்டது இல்லை..!
இதில் எதற்குமே
தடை விதிக்காத நீதிமன்றம்,
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏறுதழுவுதல்
சல்லிகட்டு
எருது கட்டு
எருது ஓட்டம்
மஞ்சுவிரட்டுக்குத் தடை விதிக்கிறது...!
பாரம்பரியம் என்பதற்காக
அனுமதிக்க முடியாது
என்கிறது சுப்ரீம் கோர்ட் ...!
பாரம்பரியம் என்பதிலும் !
வழக்கம் என்பதிலும் !
மாற்றுக் கருத்தில்லையே !
இரண்டும் ஒரு பொருள்தானே ?
அப்படியெனில்,
கொலைக்கு தண்டனை தூக்கென்றால்!
இதுவும் வழக்கம் தானே ?
இது மட்டும் தகுமோ ?
பாரம்பரியம் !
அது குழிதோண்டி
புதைக்கப்பட வேண்டிய
செயலென்றால் !
சட்டதிட்டங்கள் மொத்தமும்
தீ யிட்டு கொழுத்தும்
தருணமிதுவா ?
பழமை !
அதுதானே பாரம்பரியம்
என்பதெனில் ...
கோவிலும் தேவாலயமும்
மரஞ்செடியும் மனிதப்பதறும்
பழமை தானே ?
அதுவும்
பாரம்பரியத் தோன்றல் தானே?
அதையும் தடையெனும் பெயரில்
மக்கி மண்ணோடு மண்ணாக்குவோமா?
காலத்தின் கனிவே
உன் சிந்தை குறைவா?
இல்லை சிந்தித்தது குறைவா ?
எதிர்க்கும் வார்த்தையது
எமைவந்து தீண்டாது என்பதோ!
உமது சாடலின் நோக்கம்!?
சிங்கமென்பதும்
சிறுபிள்ளைபோல்
காணொளி களியரங்கமதில்
காளையை அடக்குமென்பதோ!
வீரத்தின் விளையாட்டை!
தமிழனின் பண்பாட்டை !
விவாதக் கூடமதில்
கேளிக்கை கூத்தாக்குவதோ?
வடநாட்டவரின் கோலிக்கு
மிளகாய் பொடியதை வீசும் !
வண்ணங்களில்
எம் தேசிய நிறமுண்டு!
என்று பேதைமை வளர்த்தோமா எப்போதேனும்!
நீதிமான்
உலகத்தில் நீயே
நடுநிலையாளன்!!!!!!
தாய்கூட பாசத்தில்
தலை சாய்வாள்
உன் நீதி தரம்பார்த்ததில்லை!
என்பதே!
எங்கள் உள்ளத்தின் நினைப்பு
அதுவும் தவிடுபொடியானது உன்னால்!
இறையென்று உன்னைக்கருதி
நீதி கேட்டது தவறா ?
இல்லை தமிழனாக
பிறந்தது தவறா ?
எதற்காகப் பிரிவினை ?
முதன்மை கூடியென்று
முடிசூட்டுகிறது உலகளாவில் "
தமிழ் மகனென்பதால்
தரம் தாழ்ந்தோமா
இந்தியாவில்?
எதற்காகப் பிரிவினை?
நாளை!
தடை பல கடந்து
படை பல சூழ்ந்து
விரட்டுவோம்!
மஞ்சு விரட்டுவோம் "
சி.செ
Comments
Post a Comment