முரண்பாடு. . . .

ஐந்து வயதில் மகன்
தந்தையே சிறந்தவன் என்பான்
மீண்டுமது, 
ஐம்பதைக் கடந்தாலேப் புரியும்

பதினைந்தில், 
என்ன தெரியுமென்பான்
அறுபதில் 
அனைத்தும் அவரேயென்பான்

இருப்பத்தைந்து
இளவட்டம் மாயிற்றே. . .
இளம் ரத்தமும் கூட, 
அது கிடக்கட்டுமென்பான்

எழுபதை எட்டும்போது, 
இப்போது இல்லையே. . . .

இனி எப்போது காண்பேன்
என் கைககளில் ஒன்று
உடைந்தேப் போயிற்றே. . . . .
என்று ஒப்பாரியே வைப்பான்

முப்பத்தைந்தில் 
இவனுக்குப்பின் பத்தில் ஒன்று, 
முரண்பாடு முற்றுப்பெறாதல்லவா. . .

நாற்பதில் இவன் தந்தை கண்ட
அதே நிலையடைவான்

பழுத்த இலை விழும்போது
பச்சை இலை சிரித்தல்,
சிறப்போ.  . .

இன்நிலை மாற்றுவோம்
இனிவரும் காலத்தில்

குறைகளைக் கண்டுகொள்
நிறைகளை எடுத்துச்சொல்

நிலைகளை புரிந்து
நிதானமதை நிலை நிறுத்தி

யோசித்துச் சொல்லுங்கள்
யோசிக்கச் சொல்லுங்கள்

தேவையானதை மட்டும்
விசாரணை செய் 

முதிர்ச்சியில் வார்த்தைக் குறையும்
ஆயினும் முத்தாயிருக்கும்

முதிர்ந்ததால் அல்ல 
யோசனை உதிர்த்ததால் 

தோழமையோடு கை கொடுங்கள்
குடும்பம் என்பது
கொடுங்கோல் ஆட்சியல்ல

உங்கள் எண்ணங்களை
துளையிட்டுக் கோர்க்காதீர்

பிடித்திருந்தால், 
அவர்களே
மாலையாக்கிக் கொள்வார்கள்

முதிர்ந்தோரே . . .
நேற்றைய இளைஞன் நீங்கள் . . .
சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். . . 

உங்களின் குறும்புத்தனம்
கூடாரம் அமைத்து - அதை
கோபுரம் என்றதையும்

அழகு ஓவியம் என்றதையும்
நினைத்துப் பாருங்கள்

அதே நிலைதானே 
உங்கள் பிள்ளைக்கும் ? 

விட்டுக்கொடுங்கள்
வலிகள் பறக்கும் ! 

தொட்டுப் பாருங்கள்
புது வழிகள் பிறக்கும்  !! 

இளைஞனே . . .
யோசித்துப்பார்

நீயும் தந்தையாவாய்
உனக்கும் நரைவிழும், 

நாளை . . . 
மீண்டும் மகன் வருவான் . . . 

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .