கோகுலும் யோசிக்கலானான்

மன அழுத்தம் என்பதைவிட வேறொரு கொடிய நோய் இருப்பதாய் சொல்லவில்லை அறிவியலும். அது இருப்பதும் தெரியாமல் தன்னை அரிப்பதும் தெரியாமலே தூபம்போட்டு வைத்திருப்பார் தனக்குள்ளே.

மனழுத்தம் கொடியது என்று தெரிந்தாலும், அசைபோடும் ஆவினம் போன்றும்... செக்கையேச் சுற்றி வரும் காளையைப் போன்றும்,  இந்த மனசும்.... அதையே செய்யும்; திரும்பத்திரும்ப. அதை எதைவைத்து அடிப்பதென்பது தான் வருந்துவோரின் நினைப்பு.... 

மனம் அழுத்தம் கொள்ளும் அந்நிலை வராமல் பார்த்துக் கொள்வதே மனிதர்களின் தலையாயக் கடைமையில் ஒன்று என்று உணர்த்த வேண்டியக் காலமிது.

அப்படித்தான் மகேந்திரனும்
துன்பத்துக்கு வாக்கப்பட்டவன் போல் 
சதாசர்வகாலமும் சோகமயமாகவே இருப்பான். ஏனென்றால், 

என்மேல் அம்மாவுக்கு பாசமில்லை மனைவியும் பேசுவதில்லை என்பதோடு... பிள்ளைகளும் என்சொல் கேட்பதில்லை என்பதே இவன் குறை...

சரி இதென்ன பெரிய காரியம், மகேந்திரன் வீட்டில்பேசி சரி செய்யலாம், என்றொருநாள்  புறப்பட்டான் கோகுல். 

வாடா வா... என்றழைத்தான். மமகேந்திரன். இருக்கையில் இருக்கச் சொன்னான்.
சொன்னதிலிருந்து ஒரு மணிநேரம் இடைவிடாது பேசினான்; பெரும் அடைமழையில் சாரலாய்.

சற்று எனக்கும் பேச இடங்கிடைத்ததும் 
நான் சொன்னேன் " இப்படி இடைவிடாது பேசினால் யார்தான்டா உன்னோடு பேசுவார் ... மற்றவர் கருத்தையும் கொஞ்சம் காது கொடுத்து கேளேன்". என்றதும் வருத்தம் வந்திருக்கும் போல். முகம் சட்டென்று பாலை நிலம்போலானது.

அவங்களுக்கு நல்லது கெட்டது சொன்னா தப்பா....?  என்றான் மகேந்திரன் ஆத்திரத்தோடு.

" அவர்களை பேசவிடாமலே நீ எப்படி தீர்மானிப்பாய் "

" .... !!! "

" என்னை பேசவிட்டதால்தான் உன்னிலையை , உனக்குள் இருக்கும் குறையை உணர்த்த முடிந்தது.
பேசவில்லை, கேட்கவில்லை, யாருக்கும் என்மேல் பாசமேயில்லை என்று நினைக்காதே நீ...."
 
" முதலில் நீ, மற்றவர் பேச்சை கேட்கத் தொடங்கினாலே...  
உனக்கான பிரச்சினை தீரும் ". என்றதும்

முதன்முதலாய் அமைதியாய் இருந்து யோசித்தான் கோகுல். 

அந்த வீடே அமைதியானது.

சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .