புகழஞ்சலி
வரமாட்டீர்
என்று தெரியும்
என்றாலும்
இன்றளவும்
தேடுகிறது
என் உள்ளம்
அந்த
அடுக்குமொழி
வார்த்தைக்கும்
மெல்லிய இதழ்
சிரிப்பிற்கும்
கரகரக்கும் உந்தன்
காந்தக் குரல்
விரிப்பிற்கும்
எந்தன் உயிரையும்
உருக்கும் உந்தன்
உடன்பிறப்பே
என்ற அழைப்பிற்கும்
ஏங்கித்தான்
நிற்கிறது
என்
ஆழ்மனமும்
நீங்கள்
வரமாட்டீர்
என்று தெரிந்தும்
அன்று
கிழித்துப் போட்ட
அந்த
நாள்காட்டி
மீண்டும் திரும்புமா
என்று நான்
பார்த்தபடி ...
செருவாவிடுதி
சிசெ
Comments
Post a Comment