என் நாசிக்காற்று மூச்சிறைக்கும் வரை
என் நாசிக்காற்று
மூச்சிறைக்கும் வரை
என் நேசத்தாயே தமிழே
உனை வணங்கித்தொழுவேன் நிதமே...
வளமானத் தமிழுக்கும்
வற்றாத வளமைக்கும்
முற்றம் தந்து
மூவாத தமிழை
மொழிகளின் தாயை
ஆதார மொழியை
அலங்காரச் சுவையை
முக்கனிச் சாராய்
பருகத் தரும்
சான்றோர் நிறைந்த
நிலாமுற்றமே,
தஞ்சைத் தமிழ் மன்றமே
நீயே என்
முத்தமிழ் மன்றமே
உமை
வணங்கித் தொடங்குவேன்
என்றுமே....
#கல்வியே வல்லதொரு ஆயுதம்
இது உண்மையிலும்
பேருண்மை பொதிந்த வாக்கியம்
ஆம் கற்றவர் நுணிக்கி
அறிந்த வாக்கியம்
இது கற்களின் ஆயுதம் தாங்கிய
கானக வாசிகள்
கற்று தெளிந்த வாக்கியம்
கம்பனை வள்ளுவனை
கடுங்கோபிகளாம் சித்தனை காலத்தழியா திருக்கச் செய்ததும் இந்த வாக்கியம்
இன்று கணினியும்
கையடக்கத் கணித் திரையையும்
கொண்டு வந்ததும் இந்த வாக்கியம்தான்
இது பொய்யரை பொல்லாதாரை
போட்டுடைக்கும் வாக்கியம்
இது உண்மையை உலகுக்கு
ஓங்கியுரைக்கும் வாக்கியம்
கல்வியே வல்லதோர் ஆயுதம்
ஆம், இந்த
கல்வியின் சிறப்பை
பெருங் காவியத்தின் அழகை
மூப்பென்பது வாக்கிலும் அறியாதக்
கன்னி தமிழ் மொழியில்
கவிதை தேனருவியாய் தருக என்றழைப்பேன் வருக
அரும்பெருங் கவியோரே
அன்னைத் தமிழ் உறவானவரே
வருக...!
வளமானத் தமிழோடும்
வற்றாதக் கற்பனைத் திறமோடும்
சொற் பதங்களையே ஆயுதமாக்கி
அற்புதங்களாய் கவிபடிக்கும்
உங்கள் பொற்பாதம் பணிந்து
வரவேற்று மகிழ்வேன் வருக...!!
அன்னநடை போட்டு
ஆவேசமதைக் குறைத்து
வண்ணமாய் தமிழ்ப் பாட்டுத் தருக...
என்று வணங்கி வரவேற்பேன் வருக
சி.செ
Comments
Post a Comment