சித்திரம் பேசுதடிக் கண்ணமா

நீ எட்டுவைத்த 
நடையழகில் - பின் 

காலில் கண்பட்டுத்தெறித்த
இதயத்துகளை தேடுகின்றேன்

அது 
தொலைந்தயிடம் தெரியாமல் . . . . . .

தும்பை செடிமேலே
தொட்டு தொட்டு எழிலாடும்
தும்பி கரம்போல், 

அன்பும் இடமாறும்
இனிய வார்த்தை பரிமாறும்

அழகே உன் காதலாலதுவும் 
இனிதே நடந்தேறும் . . . . . .

எள்ளின் வாசத்தில்
நாசி துளைக்கும் சாரமாய்

நீ பேசிய மொழிகேட்டு
விழியோடு செவிகளும்
வழியடைத்து நிற்கும்

என்னுள்ளத்தின் அன்பும்
வரும் வழிமறந்திருக்குமடி. . .

உன்னோடு பேசினால்
உலகும் மறந்துபோகும்
உள்ளத்தின் சுமையும் 
வெகுவாகக் குறைந்துபோகும்

நோய் தீர்க்கும் மகளே
உன் வார்த்தையே 
பெரும் மருந்தோ என்று.  . .
ஆய்வு செய்வோம்.  . . . .

நீ தலைகுளிக்கும் போது, 
என்னை கண்ட அவதியில்
அள்ளிச் சொருகினாய் நீ

அடுத்த கணமே
அவிழ்ந்ததடி அதுவும்

ஆஹா.  . . .
அவிழ்ந்த இடத்திலிருந்து
சொட்டும் தேன்துளியென நீர்த்துளி
உன் கூந்தல் நுனியில் இருந்து

தொலைபேசியில்
உரையாடிய படி
தொடும் தூரத்தில் நானிருந்து
கேட்பேன் வரவா என்று. . .

மேலும் கீழும் மூச்சிறைக்க
மெல்லிய புன்னகை இதழ்முட்ட
அய்யோ வேண்டாம் என்பாய் வெட்கத்தில் . . . .

நானோ.  .  .
உன் மூச்சிக்காற்றில்
ஆடிடும் முகிலாய் 
தேவி உன்னருகில்
கிரங்கி நிற்க...

கீழ் சாளரத்தினோரம்
வெண்பூனைபோல்
இருகண்களை மூடிய நீ

விழி திறப்பாயா 
என்னை காண.  . . . .

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

சொல்லாடல்

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை