கல்வியே வல்லதொரு ஆயுதம்

சங்கம் வைத்து தமிழ்
வளர்த்த நாட்கள் - தமிழ் 
நெஞ்சம் எல்லாம் 
இலக்கியத்தின் பூக்கள் - பின்னதும்

கற்றலின் பயனதை
கருதாதக் காலம்- அதுசிலர் 
தூற்றலால் பயந்து 
ஒடுங்கிய தாகாம் - 

கம்பனை வள்ளுவனை அறிந்திருந்தத் காலம், 
இருந்தும் அருந்த 
உணவை வேண்டி 
ஓடுயதலங் கோலம்

காலமும் மெல்ல 
சொல்லாமல் சொல்லும்
கல்வியின் பயனால் 
ஞாலமும் வெல்லும்

என்பதை உணர்ந்ததோ
யாரும் உணர்த்தி சென்றதோ அறியேன்....

கல்வியின் கண்கள் 
காற்றுவெளி எங்கும் 
தூற்றும் மழைச்சாரலாகத்
தூவிச் சென்றது 
தூயவர் உள்ளத்தால்

பின் கற்றலால் 
வந்தப் பயனென்

கற்றல் ஒன்றே கலாமை 
காவிய னாக்கியது 
கற்றல் ஒன்றே 
காலத்தாலழியா பலநூறு
காவியம் படைத்ததும்

கற்றல்தான் கடல்கடந்தும்
ஆளும் திறன்கொடுத்தது அலெக்சாண்டருக்கு

கற்றல்தான் சுந்தர் பிச்சையை 
கூகுளில் சுந்தரமாக்கியது

கற்றல்தான் இல்லாதாரையும்
பொருள் உள்ளாராக்கியதும்

கற்றல்தான் சாதிமதங்களை
சமநிலை யாக்கியதும்

கற்றலே காலத்தை 
கடந்து நிற்கும் ஆற்றலை தரும்

கற்றல்தான் ஏற்றத் தாழ்வில்லா
நிலையைத் தரும்

கற்றலால் கொடும் 
பசிப்பிணி அறுகும்

கற்றலால்  பல 
போர்கொடி ஒடுங்கும்

கற்றலால் தான் 
இந்த வையம் விளங்கும்

வையத்தில் கற்றல்தான்
பெருமை மிகு இந்தக் கல்விதான் 
வல்லதோர் ஆயுதம் என்பேன்

கல்வியைப் போற்றுவோம்
கற்றோரைப் போற்றுவோம்
கல்வியே வல்லதொரு ஆயுதம் என்போம்
நன்றி


Comments

Popular posts from this blog

சொல்லாடல்

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை