சின்னக்குட்டி ஆடு

" எந்த மாசமானாலும் ஆட்டுக்கு அது மே மாசந்தாண்டா பேராண்டி..." என்று சொல்லிக் கொண்டே வந்த கருப்பனோடு சேர்ந்து உதயனும் திருக்கிட்டுத்தான் நின்றார்கள்.

அங்கே கட்டிக்கிடக்கும் இருபது ஆடுக்கு மத்தியில் எப்போதும் தன் இருப்பையும் துருதுருப்பையும் காட்டிக் கொண்டிருக்கும் சின்னக்குட்டி ஆடு அங்கே காணாதது பேரதிர்ச்சியாய் இருந்தது.

கறுயி அழிந்து அதுகாரணம் எங்கேயேனும் மேய்ச்சலுக்கு போயிருக்குமோ.... இல்லை யாரேனும்.....

ஆமாம் யாரோ தனது கைவரிசையை தான் காட்டி இருக்கிறார்கள்.

கட்டுத்தறி வழக்கத்துக்கு மாறாக  இருந்ததும், ஒருசில காலடியும் இருந்தது கண்டு ஆழ்ந்து யோசிக்கலானார்

உதயனுக்கும் ஒருவாறு சம்பவம் புரிந்தது, அவனும் "சின்னக்குட்டி என பெயர் சூட்டி  ஆசையாக  வளர்த்த அந்த பெரிய ஆட்டை களவாண்டது யார்? எப்படி என மிகவும் குழம்பினான் ..." 

தாத்தா அங்கும் இங்குமாய் தன் பார்வையை ஓடவிட்டார். பின் கண்களை மூடி ஆழ்ந்து யோசித்தார் 

ஒன்றும் பிடிபடமல் " உதயா 
இராத்திரி ஆடு கத்துச்சாடா.... "

அவனும் யோசிச்சிட்டு "அப்படி ஒன்னும் நினைவில்லையே தாத்தா"

அதற்குள் கருப்பன் பத்தடி தள்ளிக் கிடந்த அந்த சுருட்டை கையில் எடுத்துப் பார்த்தான்....

" தாத்தா திருட வாரவே சுருட்டெல்லாம் பிடிக்கமாட்டான். அப்படி பிடிச்சா வாசமும் வெளிச்சமும் காட்டிக் கொடுங்குமுனு அவனுக்கு தெரியாதா...."

ஆமாம் என்பதும்போல் சிரித்தவாறு எழுந்து நின்று பார்வையை மீண்டும் ஓட்டினான். ஆட்டின் தடம் கிடக்கிறதா என்று பார்க்க...

நிலம் மெல்லத் தெளிய ஆரம்பித்தது.
கருப்பனின் ஆடு களவுபோனது காட்டுத்தீ போன்று பரவியது ஊருக்குள்.

ஊரே துயரம் பங்கிட புடைசூழ்ந்தது.
அதோடு அதை நான் செய்யவில்லை என்று சொல்லாமல் சொல்லவும் வந்தது . அவர்கள் வருவதை பார்த்து வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டார், உதயன் பக்கத்தில்.

அந்த கூட்டத்தோடு கூட்டமாக உதயனின் பள்ளித்தோழி ஆதிரையும் வந்தாள்.
ஐந்தாம் வகுப்பறையில் படு சுட்டியான இந்த இருவரும் கதையாடுவதிலும் பாட்டன்மார்கள்தாம்.

அதிலும் உதயன் சின்னக்குட்டியை பற்றி சொல்லும் கதைகளோ.... கேட்பவரை தித்திக்க இருத்தும் 

அந்த சின்னக்குட்டியின் குறும்பை 
இன்னும் சொல்லென்று கேட்கத் தூண்டும். 

" அந்த ஆடு மாதிரி நாங்களும் வாங்குவோமே " என்பாள். சிலநேரம்,  சின்னச் சிணுங்கலுடனும் ஆதங்கத்துடனும் .

அப்போ உதயன் சொல்வான்.
" ஆதி அதை வாங்க முடியாதுடி
அப்படி வளர்க்கனு தெரிஞ்சுக்க...ஊக்கும்... " என்பான்

அவள் திக்கற்று இருப்பாள் பதில் சொல்ல வார்த்தைகளற்று.

அது இருக்கட்டும். அப்படி இங்கே வந்தவள் அவனிடம் ஒரு அனுதாபமும் சொல்லவில்லை.... என்ன ஏதுன்னு ஒருவார்த்தையும் கேட்கவில்லை.

இவள் அடுத்த தெருதான்.
நடந்தால் பத்துநிமிடம் அவள் வீடு.
இப்போது உதயன் அந்த ஆடு கட்டிய இடத்தை பார்க்க மெல்ல நகர்ந்தான்.

மீண்டும் அந்த இடத்தை உற்று பார்த்தான். காலடியில் அத்தனை பெரிய தெளிவில்லை ஏதோ பாம்பு ஊர்ந்தது போன்றே தெரிந்தது.

அங்கேயே நின்று நெடுநேரம் பார்த்தான். சின்னச்சின்ன பொன்துகல்கள் மின்னுவதை கண்டான். அதையடுத்து ஆடு தின்று  சிதறிய மாவிலை கிழிசலும் கண்டான்.

அன்று மாலை தாத்தா மாவிலையை தீணியாகப் போடவில்லை என்பதை 
உறுதி படுத்திக் கொண்டான்,
பக்கத்தில் இருந்தக் கட்டுத்தறியில் வேம்பம் இலையே கிடந்தது என்பது சான்றும்கூட.

மெல்ல வடதிசை நோக்கி நடந்தான்.
அங்கே கூர் முறிந்த ஒரு சிறிய பென்சில் கிடப்பதை கண்டான். அதுவும் இவன் உபயோகப் படுத்தியதுதான் என்பதால் இவனுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை...

நேற்று வந்தது திருடன் இல்லை,
ஆட்டின் ரசிகை என்பது நினைத்து கொண்டான். இப்போது அதே புன்னகையுடன் தாத்தாவிடம் சென்றான். தாத்தா கருப்பனுக்கு இவன் புன்னகைக்கு பொருள் புரியாதுபோக. என்ன என்பதுபோல் புருவங்களை குறுக்கி, ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டார் 

அந்த புன்னகைமாறா பொன்முகத்துடன் ஒன்றும் இல்லை என்பது போல் தலையை குறுக்குவாக்கில் அசைத்தான்.

மெல்ல தாத்தாவிடம் சென்று 
அவர் காதருகில் ஏதோ சொன்னான். அவரும் சிரித்தவரே 
ஆதிரையை அருகே அழைத்து...
தட்டிக்கொடுத்து... ஆடு உனக்குத்தான் நீயே வச்சுக்கோ என்றார் 

அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது. எப்படி கண்டு பிடித்தார் என்ற திகைப்பில் வார்த்தை வரமறுத்தது. அழுவதா சிரிப்பதா என்றும் தெரியாமலும் திகைப்பு மாறாமலும், திரும்பித் திரும்பி பார்த்தபடியே நகர்ந்தாள்...

தாத்தா கேட்டார் "எப்படி கண்டு பிடிச்சே..."

இந்த பென்சில் ஆதிரைக்கு நான் கொடுத்தது, அவள் மினுக்கும் பௌடர் எப்போதும் பூசுவாள்.
அவள் வீட்டில் மாமரத் தோட்டமும் உண்டு அவள் வீடும் வடதிசைதானே தாத்தா.
அது மட்டுமில்லாமல் அவளுக்கு சின்னக்குட்டி மேலே அவ்வளவு ஆசை...
என்றான் அந்த தாராள மனம்படைத்தவன்...

சி. செ

Comments

Post a Comment

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .