விடியுமா
என்ன அண்ணே நலமா...
என்ற குரல்கேட்டு திரும்பிய அவனின் முகம் மலர்ந்த மல்லிகை இதழ்போல் பளிச்சிட்டது
நீங்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கு நலத்துக்கு என்ன குறை வரப்போகிறது அண்ணே... என்றான் இவனும் மரியாதையோடு
அதை கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளித்துள்ளி ஓடினான் முயலன்
அதைப் பார்த்து ரசித்தவாரே நடையைத் தொடர்ந்தான் இந்த ரசிகன்
சற்றுத் தொலைவில் ஒரு புதரின் ஓரத்தில்
சருகுகள் நிறைந்த அந்த பள்ளத்திலிருந்து சரசரக்கும் சத்தத்துடன் மெல்ல எட்டிப் பார்த்தது ஒரு கருநிறத்தில் உடல் கொண்ட நாகனும்
அதை கவனித்த இந்த இயற்கை ரசிகன்,
ஒளிய வேண்டாம்...
நான் பார்த்திட்டேன்...
வெளியே வர என்ன தயக்கம்
ஒன்னுமில்லை பக்கத்தில், வந்ததும் பயம்காண்டுவோமுன்னு நினைத்தேன்,
அதற்குள் கண்டு பிடிச்சிட்டியலே..!
ஆமா... நீங்கள் பயமுறுத்திட்டாலும்
என்று நகைப்போடு நடந்தான்
திடீரென்று...
அண்ணே ஊருக்குள் ஏதும் புதிய சேதி இருக்கா ....என்றவாரே வந்தது நரியாரும்
இல்லாமலா கட்டுன மனைவியை கட்டையால் அடிப்பதும், கைபற்றிய நாட்டு மக்களை துப்பாக்கியால் சுடுவதுமாய் ஏராளமான சேதி இருக்கு. இப்போது நேரமில்லை, பிறகு பேசலாம்... என்றவாரே நடந்தான், நடந்தான்... வெகுதுரம் நடக்கலானான்.
இவன் இந்த காட்டில் பிறந்தானா, இல்லை வளர்ந்தானா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எப்போதும் இங்கேயே நடமாடுவான் எந்த உயிரையும் கொன்றதில்லை அதனால்தான் இவனிடம் எந்த மிருகமும் விரோதம் பாராட்டுவதில்லை
அந்தி மயங்கியதும் ஒரு மரத்தடியில் மெல்ல சாய்ந்தான். தனது மூட்டையை இறக்கி வைத்துவிட்டு
கண் அயரும் வேளை
சடசடனு பெருங்காற்றை அள்ளி வீசியவாரே வந்து அமர்ந்தது ஒரு மயில்
திடுக்கிட்டு கண்விழித்தவன்.
அட நீயா! நான் யாரோனு நெனச்சிட்டேன்.
ஒரு சேதி கேட்கலாமேனு வந்தேன்
அதற்குள் தூக்கமா....
தூக்கமில்லை அசதிதான்...
சரி சரி ஊருக்குள் என் கலவரம்
நரியார் புலம்பக் கேட்டேனே..
அது நித்தமும் நடப்பதுதான் அதற்கு ஏன் உனக்கு வீன் பதஸ்டம்
சில நேரம் உணவுக்கு, மானிடரை நம்பித்தானே இருக்கிறோம் நாங்கள்.
அது சரி... ஒரே இனம்...! உனக்கு ஏன் பதஸ்டம் இல்லை....?
மயிலின் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
அது... அதுவந்து.... இது என்ன புதுசாவா நடக்குது என்று மலுப்பலானான்.
மயில் மெல்லச் சிரித்தது
ஏன் சிரிக்கிறாய்...
அறம் அறமென்றும் மனிதநேயம் என்றும் நித்தம் கூவும் நீங்கள் இப்படி வெட்டிக் கொண்டு சாவது சரியா...?
.......!!! எழுந்து உக்கார்ந்தான். மௌனியாக.
கோபத்தோடு மயில் தொடர்ந்தது.
அறிவில் சிறந்தவன் நாங்கள்,
ஆறறிவு நிறைந்தவன் மனிதன், அறிவியலில் வளர்ச்சி கண்டான் என்றும் பிதற்றும் பித்தர்கள்தானே நீங்கள்
சுற்றமோடு கூடிவாழ்ந்தால் என்ன கேடு வரப்போகிறது உங்களுக்கு
அடுத்தவனை அடித்து அவன் ரத்தத்தை குடிப்பதுதானா மனிதகுணம்
என்றால் உங்கள் அறமும் மனிதநேயமும்
வெறும் பேச்சோடு போச்சா...
இதில் கடவுள் என்றும் அவனே உலகை ஆள்பவன் என்றும் கற்பனை வேறு,
ஆள்பவன் ஆண்டவனென்றால் மனிதயினமே இந்த வெறியாட்டம் ஏன் உனக்கு...
தெரிஞ்சுக்க, நாங்கள் யாரையும் வெட்டிச்சாய்த் ததில்லை
வேண்டும் என்று கொன்றதும் இல்லை...
அறிவில் குறைந்த எங்களில் சிலர் இரைக்காகக் கொலையும் செய்வர்.
இதை கேட்டதும் ஏதோ சொல்ல எத்தனித்தான்...
மயில் விடாமல் தொடர்ந்தது...
அதைத்தான் செய்கிறோம் என்றால்
கொன்றதை நீங்களே தின்று தீருங்கள்...
இரைக்காக மனிதனை எதிர்பார்ப்போம்,
மனிதனையே இரையாக அல்ல என்றவாரே மயில் பறந்து சென்றது
இவன் வார்த்தைகளற்ற இறுக்கத்தில் இருந்தான். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. விடியுமா என்றே மனம் மௌனத்தில் கேட்டது....
சி.செ
அருமையான கதை
ReplyDelete