காலமே பதிலாகுமா

அன்று!
மழை பெய்தால் 

உருண்டோடும் வெள்ளம்
குளம் சேரும் 

இன்று! 
குறுகிய மனத் தேங்கலில்

தண்ணீரும் ஏக்கத்தில்
கண்ணீர் விடுகிறது

மக்கள் பஞ்சம் தீர்க்க
தஞ்சம் தரும் 
பெரும்குளம் காணாது ...!! 

குடில் தோரும் 
பாதை அதை மறைத்து

குளம் கூட 
விளை நிலமென்றாக்கி

மண்ணும் விசனப்பட்டு 
விம்மியழும் ....

இந்த பாழ்பட்ட பூமியில்
யார் வச்சக் கண்ணோ....!!

தெருவெல்லாம் ...
பெருவெள்ளம் ...
தடைபட்டு நிற்குது...!

நல் மனசெல்லாம்
பேசாது பூச்சூடி போகுது

இந்நிலையில்
நீர்நிலைகளை எப்படி காப்பது ? 

வரும் சந்ததிக்கு 
இந் நிலத்தை 
நலமோடெப்படி சேர்ப்பது...?

ஏக்கத்தில் நீரோடு 
நானும் வேரோடிப் போனேன்...

செருவாவிடுதி
சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .