அறம்.....

கொலைக் களத்தில்
கொடியேற்றி

குணம் போற்றிய 
மன்னர் காலத்து

வாளோடு வேலும்
வலுவானத் தோளும்

ஆளோடு புரவி
அறைகின்றப் போரில்

மண்ணோடு குருதி
மடிகின்ற சமயம் 

கண்ணோடு கருத்தாய் - நெஞ்சில்
கள்வடி அமுதாய்

சொல்லோடு பொருளை
இன்னும் பலகருத்தை -காலத்தேர்பூட்டி

வில்லோடு அம்பாய்
தைத்திட்டார் மனத்தில்

குருதி காணாது - நம்
குலம் தழைக்காது என்று
புலம்பியோர் பிஞ்சு நெஞ்சில் 

புரையோடிக் கிடந்ததோர்
பழங் கதையில்

அன்பென்றும் அருளென்றும்
பண்பென்றும் பகையில் லென்றும்
பண்ணோடு பண்கொண்டு 
ஆற்றுப் படுத்தினார்

ஆம், 
அறம் சொல்லித்தந்து  - குறள்
அறத்தோடு நெறிபோதித்தது
வள்ளுவத்தின் திறம்

உலகம் 
செய்தொழில் கொண்டே
செய்திட்டப் பழியை

சாத்திரம் சொல்லிய 
சாதியக் கறையை

குறையின்றி மனக்கறையின்றி
குணத்தோடும் குவளையம் போற்றும்
அறத்தோடும்

நெல்லும் மணியும்
புல்லும் பூண்டும்

சொல்லும் செயலும்
செய்யும் தொழிலும்

நேற்றும் இன்றும்
நாளும் பொழுதும்

நாகரீக குணமும்
நிலைத்த தெல்லாம்

வள்ளுவம் கண்ட
அறத்தின் பொருளென்றால்  
அது மிகையன்றோ

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

செருவாவிடுதி
சி. செந்தில் சுலோ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .