பிறந்த எட்டோடு புலம்பும் நான்தான் பட்டு என்னை பூச்சூட்டவரும் மணாளன் யாரவரோ இங்கிட்டு எல்லாம் பட்டு எனக்கும் தெரிந்துதான் பெயர் வைத்தும் விட்டாரோ வேதனையோடு இன்னும் பல இன்னல்களும் சொல்லில் அடங்கா சோகங்களும் எல்லாம் சேர்ந்த உருவாய், கருவாய் நான் பிறப்பேன் என்று மட்டும் நினைத்துவிட்டு அன்று பெற்றவளோடு பேரு வைத்தவனும் போயினன் போயினன் மற்றவர் ஏசும் ஏளனம் அதுவென் போதாகாலம் என்றே ஆயினன் ஆயினன் தங்கை எட்டையும் கரைசேர்த்து சீர்வரிசையும் சில கொடுத்து என் ஏக்கமதையும் தொலைத்து உள்ளமன்று விட்ட இடந்தேட அல்லல் நித்தம் எனை வாட்ட நானோ.... கரை தட்டும் கலமானேன் இயற்கையின் படைப்பு இன்னும் எனக்கிருக்கு முதுமையும் கொஞ்சும் அது முகத்தில் குறைவின்றி துஞ்சும் நறைகூட மெல்ல நாட்டியமாடி செல்லும் இடைகூட இன்னும் இல்லாததை சொல்லும் வந்தோரெல்லாம் வயது மூப்பதை காட்டி வாயார வாழ்த்தி வயிறாற புசித்து வந்தவழி போவர், வயதும் வம்பிட்டே போகும் கடமை என்று காலம் கடத்தினேன் நான் காலம் இப்போதென்னையும் கடத்திடத்தான் பார்க்குது காலனோடு என்னை சேர்த்து எல்லாம் இருக்க அன்றுபோல் இன்றும் என் உள்ளமும் இருக்க உரிமை என்றொரு சொ
Comments
Post a Comment