ஒரு சம்மதம் சொல்வாயா . . .

வருடம் தோரும் உன் வரவை
என் வீட்டு வாசலில் நின்று எதிர்பார்ப்பேன்

சிறு புன்னகை
வேண்டி தவமிருப்பேன்

நிமிராத நடையோடு
நிழல் கூட குலுங்காது
நீ போகும் அழகை பார்த்திருப்பேன் 
என் கண்ணொளி 
மங்கும்வரை காத்திருப்பேன்

கோதையே 
என் தேவதையே

குழாய் நீர் பிடிக்க
குழுமியோர் சண்டையிட

குயில்போல்,
நீ இருக்குமிடம் தெரியாது
உன் சிலம்பொலியும் சிரிக்காது

உன் குரல் கேட்க 
தவமிருப்பேன்

தினமும் நான் 
தவித்திருப்பேன்

நினைவு கொண்ட
நாள்முதல்

நினையெண்ணும் உள்ளத்துள்

நித்தமும் போராட்டம் 

உனக்கு நரைவிழுந்த பின்னும்
நரைக்க வில்லை 
என் காதல் பூந்தோட்டம்

உங்கூட்டு பெண்களெல்லாம்
புது வாழ்வு கொண்டபோதும்

எது காரணம் கொண்டோ
கரம் நீட்ட மறுக்கின்றாய்
மணம் முடிக்க வெறுக்கின்றாய்

பள்ளி பருவத்திலும் - நீ
தள்ளியே தானிருப்பாய்

பேச்சு வரவில்லையே என்று
கல்வியாசான் குமுறியபோது

பரிதாபம் வேண்டாமென்று
பதரி நீயழுததும்

பாவி நெஞ்சில் 
பதிந்தத் தடம் மாறவில்லை

உனை எண்ணிய நெஞ்சுள்
ஏக்கம் தாழவில்லை

என்னவளே
இப்போதேனும்
ஒரு ஆக்ஞை செய்

பிரக்ஞை அற்ற என்நெஞ்சை
பிழைக்கச் செய்

நீர் நிறைத்த குடத்தோடு
என் வீட்டு 
திண்ணைவரை ஒதுங்கச் செய்த இயற்கைக்கோர் நன்றி சொல்வேன்

என்னவளே
இப்போதேனும் ஒரு சம்மதம் சொல்

உன்னையே மணமுடிக்க 
மனந்துடிக்கும் என் மனதுக்குள்ளும் 
மழையில் வந்த தேவதையே!

செருவாவிடுதி :
சி. செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்