கொரோனாவின் வெற்றி...
நிலாமுற்றத்தின்
261 - வது
கவியரங்கம்
கொரோனாவின் வெற்றி
என்ற வினாவின் விடைக்கு
விருத்தக் கவிதை
ஆயிரம் படைத்து - எமக்கு
இனிய தமிழ்ச் சொல்
விருந்து கொடுத்து
புரியாதச் சில புதிருக்கும்
பலமானச் சில கேள்விக்கும்
வளமானத் தமிழ்த் தரக்கண்டு
வடிவானப் பண் சேர்த்துண்டு
நான் மகிழ்வானேன்
கவிமகிழ் வானே...
உம்மால் நான்,
மகிழ்வானேன்
கொடுத்தத் தலைப்பில்
எடுத்துத் தொடுத்தக்
கவி ஆயிரமும்
பூத்துக் குலுங்கும்
பூவண்டாடும் சோலை
தேனொழுகும் பாயிரமன்று
அது அஞ்சாப்போர் மறவன்
கையிருக்கும் வஜ்சிராயுதமே
நெஞ்சம் நிறைந்தேன்
கவி கொஞ்சமாயினும் அதை அருந்தேன் அது அரும் தேன்
நேற்றோடு நின்றும் என்றும் குடித்தேன்
படித்தேன்
கவிதை ஒவ்வொன்றும்
படி தேன்
ஓலை குடிசையில்
ஒடியாடவும் இடம்
இல்லாதப் போதிலும்
அன்று
இன்பம் இல்லாமலில்லை
இன்று
ஆலை கரும்பெனக்
ஆளை வருத்தும்
உடல்நோவை கொடுக்கும்
வேலை பளுவிலும் வரும்
வேர்வை குளியலும்
ஊதியம் தராது
உள்ளம் உறங்கவும் செய்யாது
பிள்ளை பசியினின்
மனம் கொள்ளை போகும்
அந்த அழுகை செலுத்தும்
என் இறுதி பயணம்
கொரோனாவின் கோரப்பிடியில்
ஒரு வேலையில்லை
நான் வாழ்வதிலும்
இனி வேலையில்லை
கொடும்பசி கொடுமை
குழந்தையின் வயிறை
தடவி நழுவ
என் வறுமையைச் சொல்லி
மனையாள் மயங்கி சரிந்தாள்
அடுத்தவர் பார்க்கச் சிரிப்பாரென்று
அடுப்பும் சும்மா எரியுது அங்கே
பூனையும் பிள்ளை
கால்தனில் வாலை உரசும்
அதுவும் அருந்தி மடிய
மருந்தெதுவும் கேட்குதோ அறியேன்
இருப்பவர் கேட்டாள்
கொடுப்பார் என்றென்
நீட்டியக் கரமும்
மறத்தது அறியேன்
மதித்தவர் கூட
மதியாது இருப்பதை
இப் போதறிந்தேன்
மேடையில் பேசி
வாடையின் காற்றாய்
ஈகையைச் சொல்லி
போனவர் கூட
ஆடையை மாற்றி
ஆளையும் மாற்றி
இருப்பதை கண்டு
இமைப்பதை மறந்தேன்
கொடும் பசியிலென்
யாக்கையை துறந்தேன்
எம்மை கொன்றது
கொரோனா வன்று
கொடுக்க மறுக்கும்
கொடை வள்ளல்கள் அன்றோ
கொலை களத்திலும்
குணம் போற்றி
அறம் போற்றிய மானுடம்
இன்று தடமாறிப் போகுது
முழுமானுடம் தோற்றுப் போகுது
அங்கே விஞ்ஞானம்
பெரிதொன்றும் இல்லை
மெய்ஞானமும்
பெரிதொன்றும் இல்லை.....
இங்கே போராடி நின்றவரும்
போய்ச் சேர்ந்தார் பூவுலகை விட்டு
மனிதாபிமான இன்றியே
மாறடித்த கூலிகளும் மாய்ந்தனர் இன்று
கொரோனா
விஞ்ஞானத்தை ஏய்த்து
மெய்ஞானத்தையும் பழித்து
மனிதாபிமானத்தை தொலைத்து
மதங்கொண்ட யானையாய் திரிந்தது அதனால்
முழு மானுடமே
தோல்வி கண்டது
Comments
Post a Comment