வேப்பந்தோப்பு குயிலே
வாடை காலத்தில் ஆடி
கோடையில் வாடும்
இலையல்ல வாழ்க்கை
வாழ்க்கை என்பது
வேடிக்கை பொருளா ?
சோம பாணத்தில்
வார்த்தை வாள்வீசி போவதிங்கு
வீரத்தின் மருளா
அந்தியில் திரும்பும்
அன்றிலும் பருந்தும்
அமைதியாய் போவது
அச்சத்தின் பொருளா
உண்ட மிச்சத்தில் கொஞ்சம்
கூட்டினுள் ஊட்டிட வேண்டி
அலகிடை சுமக்கும்
அதையெண்ணு மனிதா
கடினத்திலும் கடினம்
உன்னுழைப்பு அறிவேன்
உன் உடலுலைத் தலுப்பு மாற
கள்ளுண்டு நீயும்
கால் தட்டி இடறி
இடைகட்டு மறந்து
பொடி தட்டி போவாய்
நீ சிறுக சிறுக சேர்த்து வைத்த
மானத்தோடு சேர்ந்து
மதிமயங்கிப் போவாய்
பிடிவிட்ட கொடியாய்
திசைகெட்டு போவாய்
பசிக்கு மருந்தில்லாது
ருசிக்கும் வழியில்லாது
படுத்துறங்கும் பாயில்
உன் முகவரி சொல்லும்
நீன்பெற்றப் பிஞ்சு குழவிகள் தெருவில்
வேப்பந்தோப்பு குயிலே - உன்
வேலை இதுவல்லத் தளிரே
சாலையில் உறங்கும் தளிரும்
கல்விச் சாலையில் பயிலும்
அதுவுன் தெளிவில்தான்
அட ஆலயம் இருக்கும் பொருளும்
உன் சிந்தயில் சிவமாய் தெளியும்
அந்திமாலை வந்ததும் மயக்கும்
இது மதுவல்ல...
உந்தன் மைவிழியாள்
மனத்தால் தந்திடும் சொர்க்கம்
மதுமட்டுமா இனிக்கும்
வேப்பந்தோப்பு குயிலே,
வேம்பம் பூவிலும்
தேனிருந்து சுவைக்கும்
அறிவாய்
சி.செ
Comments
Post a Comment