சொல்லாடல்


வையம் ஆண்ட
வண்ணத் தமிழே
வாகை சூடிய
காந்தக் குரலே
உந்தன் சொல்லோடு சேந்தன்று சொக்கித்தான் போனது
தமிழர் நெஞ்சம்

நீர் சொல்லாது போனதால்
இன்று
சோகத்தனலில் தமிழகம் எங்கும்

உந்தன் கவிதை தேனுண்ட
தமிழர் நெஞ்செல்லாம்
மலர் கள்ளுண்ட வண்டெனவும்

உந்தன் பகுத்தறிவு பாலுண்டதால்
தம்பிகள் நெஞ்செல்லாம்
சுயமரியாதை வேல்கொண்டு
நிற்குது காணீர்

திண்டாடி திண்டாடி 
உளம் பந்தாடிபோன 
பாட்டாளி நெஞ்சில்
உந்தன் சொல்லாட்சி ஒன்றால் சோறுடைத்து நின்றாய்

அண்ணாவின் இதயத்தை
இரவலாய் வாங்கியது கொடுக்க
வருகிறேன் என்றதை சொல்லி
வாய்விட்டு அழுது புலம்பியது
உன்புகழ் ஊர்வலத்தில் மக்கள் 

மனிதனாய் பிறப்பெடுத்த புனிதனே
அவதாரமாய் அவதரித்தத் தலைவனே - நீ

மண்ணகம் துயில் உறங்கினாலும்
உன் செயலெதும் உறங்காது
செய்து உலவினாய்

பக்தியெனும் மாயபித்தில்
பராசக்தியெனும் வேப்பிலையடிது அன்று

ஏய் பூசாரி 
அம்பாள் எப்போதடா பேசினாள் என்றே
புரையோடிய மூடத்தில்
நரையோடிய மூத்தோனாய் 
சிறு வயதிலும் 
கொடும் புல்லுருவிகளை
புறமுதுகிட்டு ஓடிடச் செய்ததும் 
உன் சொல்லாட்சி 

பகுத்தறிவு பகலவன் வாக்கும்
அன்பிற்கினிய 
அண்ணாவின் மூச்சும்
உன் பேச்சோடு 
கலந்து என்றென்றும் தமிழர்க்கு 
உயிர் மூச்சென்றானது உண்மை

அதுன் 
சொல்லாட்சியின் பெருமை

செருவாவிடுதி :
சி. செந்தில் குமார்

Comments

Popular posts from this blog

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை