நன்றி

நடை பழகிய நாட்கள் - 
நளினத்தில், 
நா பழகிய பாக்கள்

அதென் சோகத்தின்
உள்ளத்தோடு இரும்
சோம்பல் முறிக்கும் முயற்சி...

என்னிலையோடு 
உள்ளம் ஒப்பிடும் உறவை, 

அவர் 
உயர்ந்தது அறியாது.

எப்போதும் நான்
மௌனத்தின் சாயல் தானன்றி 

கேள்விக்கு பதிலுரையா...
ஊமையல்ல, 
நீதியுரைய
நீதிமானுமல்ல நான்.

சில நேரம் தடுமாற்றமும்
பல நேரம் தடுமாற்றதை அவர்க்கு உணர்த்துவதும் உண்டு

இருந்தும் 
அவர் உணராத விடயம்
விடமாகும் என்னில்

ஆதலால் 
விடையும் பெற்றேன்

விடை பெற்ற என்னிடம்
குறைகேட்போ
குசலம் வினவலோ
கூடாது ஒருபோதும்

ஏனென்றால் 
வினவும் வார்த்தையும்

நானுயர
ஏணியாக கூடுமே...
என்பது அறியாரோ

அறிந்தவர்க்கு 
நன்றி

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .