உறவு. . . .

அவசர கதியில்
நெடும் பயணத்தில் நீ 

அலையாடும் கடலில் 
அலை குதித்தாடும் கயல்போல்
 
பேருந்தில், 
ஒரோரத்தில் நீயும்...
 
கரிசனத்தோடு நடத்துநரும் 
பயணச்சீட்டை நீட்டுவார் 
 
அவதியில்லாமல் தொடங்கி 
அவதியில் முடிப்பாய் 
 
நாற்புறமும் தொட்டுப்பார்த்து 
பதறும் விழியோடு 
பாவமாய் பார்வை வீசுவாய்
 
புழுவென்று கருதி 
தூண்டில் முள்கடித்த மீன்போல்
 
உன்நிலையறிந்தோர் உள்ளம்
உன்னை திட்டுவதா 
இல்லை, 
 
வண்டியை நிறுத்துவதா 
என்ற கோப பார்வையோடு அவரும்
 
பயணச்சீட்டை உன் கையகம் 
திணித்துச் செல்வார் . . . 
 
பேரிடி விழுந்தது
அது கனவில் என்பதுபோல் . . . 

உன் பரிதவிப்பும் 
பாதியாய் குறையும் 
 
உன் கண்கள்
இருண்ட நிலை தெளியும்
 
தூரத்து உறவில் 
விட்டுப்போனவரில்
 
ஒரு முகச் சாயலில் தெரியுவார்  
நடத்துநரும்
 
உள்ளத்தின் 
உள் ஆழத்திலிருந்து 

மூச்சுவிடுவாய் 
இந்த புது உறவை எண்ணி . .  .


சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .