அம்மா..

வறுமையோடு நாமயிருக்க
வரம் வாங்கி வந்தோமா 

நம்ம கூட சேர்ந்திருக்க
வறுமை வரம் வாங்கி வந்துச்சோமா

தகப்பன்னு சொல்லுவே
சக மனுசனாவும் நின்னதில்லை

குடும்பத் தலைவன்னு 
சொல்லுவே
படியரிசியும் வாங்கி தந்ததில்லை

எப்போவாச்சும் வருவாரு
என்னையும் ரெண்டு அடிப்பாறு

அடிதாங்க மாட்டாமெ
நானோடி போயிருவேன்

வெகுநேரம் சென்டு வந்தா!

தலைவிரி கோலத்தோடு
அழுது பொலம்புற நீ...

பொறந்த ஒண்ணையும்
கரைசேர்க வழியில்ல

இப்பவந்து 
அடிபோட்டு போரானே
அடுத்ததெ நான் 
என்னசெய்வேன்..ன்னு 
சொல்லி கதறியழுவே
நானும் 

உருண்ட பாத்திரமும்
ஒடஞ்ச மண்கொடமும்

ஒழுங்கு பண்ணி வைக்கிறேன்..
ஒடஞ்ச உம்மனசெ 
தேத்த வழியில்லாமல்....

கடுதாசி பொறுக்கி வந்து
கதை கதையா சொல்லிவைப்பே

காலமிது காலம் 
பொல்லாத காலமுன்னு
அது சொல்லாமல் கொல்லுமுன்னு
அப்பப்போ சொல்லிவைப்பே

அதை சொல்லும்போதும் நீ
சொல்லமா
கண்ணீரும் தொடச்சி வைப்பே

அம்மா
நீ கல்லொடைக்கும் போதுகூட - என்னை
கண்கலங்க விட்டதில்ல

என்னையள்ளி முலையூட்டும் போதுகூட
முடங்கி நீ கிடந்ததில்ல 

பசிகூட உன்னை விட்டு 
போக மனமில்லாமத்தான்
பலநாளா நிக்குதேன்னு...

உனக்கு சோறாக்க
நினைச்சு 

இருந்த அரிசியெல்லாம்
எடுத்து போடுறேன்...
எரியுற அடுப்புல..

முதல்ல 
பானையை வைக்கனுங்கிறது
தெரியாமெ

அரிசி பொறிஞ்சது கேட்டு
ஓடி வந்தும் 

இருந்தது போச்சேனு
அடிக்க நினைக்கல நீ

அள்ளி அணைக்கிறே
என்னோட பாசத்தயெண்ணி
எண்ணி

நான் இப்பவும்
யோசனையோடு 
தோள் சாயுறேன்

உம் பசி தீர்க்க
என்ன வழி?????? 

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .