நியாயமாரே... கேளும்...
நல்லவன் செயலில்
நாமும் நின்றால் -
நம்மையும் நானிலம்
போற்றிடும் அறிக!
வல்லவன் கூட்டில்
வந்தவர் எல்லாம்
குஜபலன் என்றே
கூவிக் குமையும் புரிக!!
அட
கள்வன் ஒருவன்
கரம்பற்றி நின்றால்....!
பார்ப்பவர் கண்கள்
என்னென்று சொல்லும்
தெரிந்து கொள்,
புற நீதிக்கு போதனை
செய்தவர் கூட
நாணத்தில் சாகும்
நாளொன்றில் நில்லும்
நாடறிந்த நாணமற்றோனை
பேரெடுத்த பெருந்திருடனை
ஆகச்சிறந்த நல்லவனென்று
காக்கும் கரங்களை
கடுஞ்சொல் வீசாது
கண்ணீரொழுக
கண்டு மயங்கவோ...நான்
பசிக்கு இரையாவது
பசுந்தளிர் தழைக்கும்
பலமில்லா உயிர்க்கும்
பாழும் உலகம்,
காலகாலமாய்
விதித்தே விதி என்றானது
நாம் பகுத்தறிந்து கண்டதால்
ஆறறிவும் கொண்டோம்
பகைமை உளத்தால் - நெஞ்சில்
பகுத்தறிவாத் துஞ்சும்
குற்றம் இழைத்தக்
குள்ளனின் பக்கம்
நிற்பதில் என்ன நியாயம்
மானியரே- நீங்கள்
மதி மறந்திரோ - அன்றி
மந்தியின் குணம் கொண்டீரோ
கடலை உருண்டையோடு
கடன்பட்ட வாழ்க்கையின்
கண்ணீர் கரிசலையும்
விற்றுப் பிழைக்கும்
பேரிளம் பெண்மையிடம்
உனக்கென்ன வீம்பின்
வீரத்தின் சாரம்
சாதியம் போற்றிடவா ?
சண்டிய ராகிடவா ?
கள்வனுக்கு
கஞ்சி வைப்பவனும்
கள்வனே
இது நாடறிந்த சேதி
இனியேனும் யோசி
செருவாவிடுதி :
சி.செ
Comments
Post a Comment