பெண் கல்வி
இந்த வார்த்தையை
ஏளனம் என்று
எண்ணிய எத்தர்கள் - இன்று
ஏட்டிலும் இல்லாமல்
இடுகாட்டிலும் இல்லாமல்
எங்கோ
போயினர் போயினர்
பொடிகூட மிஞ்சாமல்
காற்றோடு கலந்து
காணாமல் போயினர்
கல்வி அது
காலத்தால் அழியாத
காவியத் தலைவி
ஆயிரம் செல்வங்கள்
அடிபோட்டு நின்றாலும்
கள்வனும் கொள்ளை
கொண்டிட முடியா
கற்பனைக்கு கிட்டா
அற்புத சுரபி
அது
அம்மையின் சொல்லி
வாய்மொழி பேச்சில்
அழகாய் தொடங்கிய
முற்கண் கல்வி
அவ்வழி,
ஆளானபின்னும் முடிவில்லா கல்வி
நாளைய சந்ததி நலம்பெறும் கல்வி
அதுதான்
நல்லோர் போற்றிடும்
பெண்களின் கல்வி
இன்று ஆயிரம் தடைகளை
பெருங்கடல் அலைகளை
கடந்து வருவதே
பெரும்பாடு கொண்டோம்
அதிலும் அடுக்குகள் பலவாய்
பதினாயிரம் கொடுத்து
வடிகட்டி வடிகட்டி
எங்களை வாட்டி வதைப்பதே
வாடிக்கையானது
அதில் நீட்டும் கொஞ்சம்
கைகொட்டி சிரிக்குது
எல்லாம்,
விதி செய்யும் சதி என்றோ
இல்லை,
மதிசெய்த விதியென்றோ
கடந்திட நினைத்தால்
சாமத்தில் திரியும்
காமச் சண்டாளன் கொடுமையும்
திண்டாடச் செய்யுது
இதிலெங்கள் பெண்கல்வியும்
தள்ளாடி நிற்குது
இந்நிலை இல்லாது போக்கிட
பெண்ணினம் நலமோடு காத்திட
ஒரு துப்பாக்கி வேண்டும்
ஆம்
ஒரு துப்பாக்கி வேண்டும்
இருந்தால்
வெறியரும் நெறிமாறாது
கள்வரும் வழிமாறாது
எப்போதும்
பெண்கள் கல்வியும் தடையிறாது
தமிழச்சி தலை வீழாது
Comments
Post a Comment