ஆயுதம் செய்


உலகம் முழுதுமின்று
இச்சையின் ஆசையில் 
எச்சையாய் திரிந்திடும்
நரிகளின் நகர்வலம், 
அது நடுசாமத்திலும் 
அலைந்திடும் கேள்...

மேன்மையில் சிறந்த
பெண்ணியத்தை குலையறுக்க
காத்திரும் கயவர் கூட்டங்கள்
கண்டால் நீயும் கலங்காதே
கலக்கத்திலும்
நடுக்கத்திலும்
துரத்தவும் வழி செய்யாதே..

தூயவளே....
தூயமனத்தோடும் 
துனிகரத்தோடும்
துணைபோ....

அவன் தேடலில் கொஞ்சம்
ஆவலை தூண்டு

அவனுள் நீயும் 
தொலைந்து போ...
அவனையும் உன்னில் 
தொலையச் செய்...

தயக்கமின்றி 
அவன் சிந்தையை திசை திருப்ப
உன் ஆடையில் ஒன்றை அவிழ்த்தெறி...

அங்கங்கள் ஒவ்வொன்றாய் தேடிப்போ...
அந்தரங்க இடமதையும் நாடிப்போ....

இப்போது கேள்...!
இவன் குலையறுக்க வந்தவன் 
என்பது நினைத்து நில்...

பதட்டம் வேண்டாம்...
ஈவு இரக்கமும் வேண்டாம்
துணிந்து செய்...

அறுக்க முடிந்தாலும் சரி
இல்லை
கடித்தெடுக்க முடிந்தாலும் சரி

மிச்சம் வைக்காதே...
மிச்சமேதும் வைத்திடாதே...

உற்றவன் என்பவனும்
உயிர்நாடி இழந்தவன்
உயிர்காக்கவே துடிப்பான்

சிலநேரம் 
உன் உயிருக்கும் 
உலைமூட்டுவான் 

போகட்டும் 
போராட்டம் என்றால்
விழுப்புண் வேண்டும்தானே
இல்லையேல் வீரமேது

உன் வீரதீரச் செயல்
பத்து இடங்களில்
பதறும் செய்தியாய் 
பற்றிப் படர்ந்தால் போதும்

காமனே ஆனாலும்
உன் காதலுக்காய்
காலம் கடந்தும் 
கடும் தவமிருப்பானே தவிற
ஆசையில் அத்துமீறிட மாட்டான்....
ஆவி பிரியமாட்டான்...

பொருத்தது போதும்
வழியும் உன் விழிகளை துடைத்து நீ ஆயுதம் செய்...
கெட்டபோரிடும் உலகை 
வேரோடு சாய்

சி.செ




Comments

Popular posts from this blog

சொல்லாடல்

பருவம் கடத்தும் வறுமை

சீர்வரிசை