நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
வாசம் நிறைந்த பூஞ்சோலை
வண்ணத்தூரிகை பேசுமாஞ்சோலை-அதில்
நேசம் பாடியோர் தேன்சிட்டும்
நேற்று போனதிசை புரியவில்லை
புன்னகை தூவிய முகத்தில் - விட்டுப் போகையில் சற்றும் பொலிவில்லை
நித்தமும் பொல்லா துயரம்வரும் - அதில் நித்திரைகூட மறந்து விடும் - இருந்தும்
காரணம் ஏதும்சொல்லிலில்லை-யார்க்கும்
காதோரம் சொன்னதாய் நினைவுமில்லை
காய்த்துக் குலுங்கிய கனிவகைகள்-பறவை
காணாது போனால் காம்பறுமோ
சாய்த்து விடுவோம் கனிமரத்தை-என்று பறவை நினைத்தால் பலனிருமோ
தேய்ந்து தேய்ந்து போனாலும் - நிலவு தேய்வதில்லை என்ப தறிவோம்
சாய்ந்து சாய்ந்து வீழ்ந்தாலும்-நாணல் சளைப்பதில்லை என்பதறிக
நாம் போனால்
நானிலம் அழிந்துவிடும்- என்று
நினைத்தால் உன்போல் மூடனில்லை
சி.செ
Comments
Post a Comment