தூரிகை
சாலையோர மதில்
சுவரில்
சாயம் போன
மனதோடு
சான்றுரைத்தார்,
ஓவியச் சான்று
பச்சை இலையும்
கரித்துண்டும்
கையில் கொண்டு
எழில்
மிஞ்சுமோர்
ஓவியந் தீட்டியோர்
ஊமையோ?
பாதசாரி பலரும்
பரிவு வார்த்தை கேட்டும்
தன்னை மறந்து
போவோரை . . .
பார்த்தேங்கியது
ஓர் தூரிகை
சாலையோரக் கடையிலிருந்து
செருவாவிடுதி :
சி.செ
Comments
Post a Comment