உறவுகள்

ஒதிங்கிப்போகும் உறவுகளே 
ஒதிக்கிவைத்த நினைவுகளை 

உங்கள் மனமதும் மாக்களைபோல்
அசைப்போடட்டும்
ஆழ்மனமதை எடைபோடட்டும்

பழுத்த மரஞ்சுற்றும்
பறவைக்கூட்டமாய்
புலங்கிக் கிடந்த உறவுகள்

கோடை இடியில் 
பற்றியெரியும் நிலையில்...
பறவைகளும்
மரம் விட்டு ஓடுமே

அந்நினைவை
தொட்டாடுமென் உள்ளம் 

இது உண்மை உணர்த்திய
நிமிடம்

இன்றிந்த
பாசத்தின் பரிசுத்தம்
பார்த்து மயங்கிய கண்கள்
நீர் வார்த்திருக்க

எம்மை
மற்றவர் மறப்பதொன்றும்
மிகையல்லல்

மடிசுமந்த மகனும்
மறப்பதோ

மலர் சூடிய
மகளும் வெறுப்பதோ

இதுதான் இயற்கையா
இனிமை வாழ்க்கையா

தாய்
ஊட்டிய உதிரமும்
ஊனமானதே

சேய் 
திட்டிய வார்த்தையே
தித்திப்பானதே

என்னருமை
சொந்தங்களே

இந்த பிரிவொன்றும் 
பெரிதல்ல

என்றேனும் ஒருநாள்
உங்களை விடுத்தும்
இம்மண்ணகம் பிரிந்தும்

நாங்கள்
செல்ல நேருமே

அதையும் நினைத்துகூட வருத்தமில்லை

எங்கள் நாசி 
கடைசிமுறை 
மூச்சிறைக்கும்போது

அங்கம் நனைக்க
நீச்சத்தண்ணியும்

உடல் வெந்திட
சிறு கொள்ளியும் 
கொஞ்சம் 
கிள்ளிவைக்க

உறவே! 
சொல்லியனுப்புகள்
எம்மக்களை 

அதுபோதுமெங்கள் 
மகிழ்விற்கு

இப்போது நாங்கள்
மனதாறப்பிரிந்து செல்வோம்

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .