Posts

Showing posts from November, 2021

சந்தர்ப்ப சகுணம்

ஊரேக் கொண்டாடும் காவடியாட்டமும் பொய்க்கால் குதிரையும் பால் குடமும் பார்க்க மட்டுமே நம் கூட்டம் அதில் கூடினால் ஏனிந்த வேலை உன் வேலையைப்பார் என்பார் எகத்தாளத்தோடும் ஏழெட்டு பேரோடும் தேங்காய் உரிக்கும் இடம் தோட்ட வேலையிடம் நம்மைக் கண்டால் !  இது என்ன சிரைப்பதென்றா நினைத்தாய் என்பான் இதுயென்ன அத்தனை இழிவானதா இல்லை  இதைவிடுத்து  வேறெதுவும் நம்மால் இயலாததா இது மட்டுமல்ல உரிமை என்பார் உதாசினப் படுத்துவார் ஓடாய்த் தேய்ந்து  உரு மாறினாலும் ஒரு வார்த்தையில் கூட வெகுமதி இராது இதை  எப்போதாவது யோசித்தாயா ? இல்லை யோசனை மறந்தாயா ? அட்சதைக்கு  அகத்திக் கொடுப்பதும் உன் வேலை நளுங்கு வைத்து கங்கணம் கலைவது நீ ஒரு பயணத்தின் நடுவே உன்னைப் பார்த்தால் சகுணப் பிழையென்பார் பயணம் தடையிடுவார் அறிவார்ந்தோர்! அறிவாயோ ? உன் இழிவுக்கு  நீயேக் காரணம் உன்  உயர்வுக்கு !!!  யோசிக்கத் தொடங்கிவிட்டாய் மகிழ்ச்சி நம் உறவுக்கு இதுதான் வளர்ச்சி திருமணச் சடங்கு திருவிழாத் திடலில் முடிமழிப்பு அந்திமறக்கொட்டல் இடுகாட்டுச் சதுக்கத்திலும் இழிவுக்கு பஞ்சமில்லை மாண்ட பூதவுடலை மகன் கூடத் தொடுவதில்லை மூக்குத்திக் கடுக்கனும் அரணாக்கயறும

தூரிகை

சாலையோர மதில்  சுவரில் சாயம் போன  மனதோடு சான்றுரைத்தார்,  ஓவியச் சான்று பச்சை இலையும் கரித்துண்டும்  கையில் கொண்டு எழில்  மிஞ்சுமோர்  ஓவியந் தீட்டியோர்  ஊமையோ?  பாதசாரி பலரும் பரிவு வார்த்தை கேட்டும் தன்னை மறந்து  போவோரை . . .  பார்த்தேங்கியது  ஓர் தூரிகை சாலையோரக் கடையிலிருந்து செருவாவிடுதி : சி.செ

சீர்வரிசை

பிறந்த எட்டோடு  புலம்பும் நான்தான் பட்டு என்னை பூச்சூட்டவரும் மன்னவன் யாரவரோ இங்கிட்டு எல்லாமும் பட்டு எனக்கும் தெரிந்துதான்  பெயர் வைத்தும் விட்டாரோ வேதனையோடு இன்னும் பல இன்னல்களும் சொல்லில் அடங்கா சோகங்களும் எல்லாம் சேர்ந்த  உருவாய்,  கருவாய்  நான் பிறப்பேன்  என்று மட்டும் நினைத்து அன்று பெற்றவளோடு பேரு வைத்தவனும்  போயினன் போயினன் மற்றவர் ஏசும் ஏளனம் அதுவென்  போதாகாலம் என்றே  ஆயினன் ஆயினன் தங்கை எட்டையும் கரைசேர்த்து சீர்வரிசையும் சில கொடுத்து என் ஏக்கமதையும் தொலைத்து உள்ளமன்று விட்ட இடந்தேட அல்லல் நித்தம் எனை வாட்ட நானோ.... கரை தட்டும் கலமானேன் இயற்கையின் படைப்பு  இன்னும் எனக்கிருக்கு முதுமையும் கொஞ்சும் அது முகத்தில்  குறைவின்றி துஞ்சும் நரைகூட மெல்ல  நாட்டியமாடிச் செல்லும் இடைகூட இன்னும் இல்லாததை சொல்லும் வந்தோரெல்லாம்  வயது மூப்பதை காட்டி வாயார வாழ்த்தி  வயிறாற புசித்து வந்தவழி போவர்,  வயதும் வம்பிட்டே போகும் கடமை என்று காலம் கடத்தினேன் நான் காலம் இப்போதென்னையும் கடத்திடத்தான் பார்க்குது காலனோடு சேர்த்து எல்லாம் இருக்க அன்றுபோல் இன்றும் என் உள்ளமும் இருக்க உரிமை என்றொரு சொல்லோடு

மீண்டும் நான் காதலிக்கிறேன்

வாழ்க்கையெனும்  பேரிருள் கூட்டின் உள்ளே ஓர் இன்னலின் இடிபாட்டில்  இன்பமிழந்து சிக்குண்ட யான் சிற்றின்ப ஈசலாய் சிறகு விரித்தேன், பின் சிக்கல்களில் மீண்டு வந்து மீண்டும் நான் காதலிக்கிறேன் இல்லாத விசமத்தில் - பதில் இல்லாத கேள்வியில் இல்லாளே - என் இம்சைக்கு ஆளானவளே அந்நினைவை மனந்துடைத்து மீண்டும் நான் காதலிக்கிறேன் கண்ணாடி பார்த்தே  முகத்தில் உருவான பருக்களை உச்சி கொட்டி நொந்தவளே.... என்னுதிரம் சுமந்து நீ மெய்தளர்ந்த போதிலும் தன்மேனி எண்ணி நொந்ததில்லை அதை எண்ணி எண்ணி மனம் வியந்து வியந்து பேதலித்தேன்,  பேதையுன்னை காதலித்தேன் மீண்டும் நான் காதலிக்கிறேன் நான் தலைவலி என்றாலும் கடும் சுரத்தோடு நின்றாலும் பெரும் நோம்பிருந்து காப்பதேயுன் கடமை என்பாய் உன்னுடல் நோவென்றாலும் உள்ளத்துள் ரண மென்றாலும் ஒரு வார்த்தை கூட  கேட்டதில்லை - ஆறுதலாய் ஒரு வார்த்தையும் நான் சொன்னதில்லை... அதை நினைத்து வருந்தி மீண்டும் நான் காதலிக்கிறேன் பிள்ளையோடு உன் கோபம் பிறை நிலவாய்  தேயும் வளரும் சிற்சில நேரம் கடுஞ் சொல்லாகியும் போகும் யாரை நோவது நான் என் வசவுக்கு நீயே பலியாவதும் நித்தம் நடக்கும்  சந்தம் இதுவாகி போகும் ஆதல

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

வாசம் நிறைந்த பூஞ்சோலை  வண்ணத்தூரிகை பேசுமாஞ்சோலை-அதில்  நேசம் பாடியோர் தேன்சிட்டும்  நேற்று போனதிசை புரியவில்லை புன்னகை தூவிய முகத்தில் - விட்டுப் போகையில் சற்றும் பொலிவில்லை நித்தமும் பொல்லா துயரம்வரும் - அதில் நித்திரைகூட மறந்து விடும் - இருந்தும் காரணம் ஏதும்சொல்லிலில்லை-யார்க்கும்  காதோரம் சொன்னதாய் நினைவுமில்லை காய்த்துக் குலுங்கிய கனிவகைகள்-பறவை  காணாது போனால் காம்பறுமோ சாய்த்து விடுவோம் கனிமரத்தை-என்று பறவை நினைத்தால் பலனிருமோ  தேய்ந்து தேய்ந்து போனாலும் - நிலவு தேய்வதில்லை என்ப தறிவோம் சாய்ந்து சாய்ந்து வீழ்ந்தாலும்-நாணல் சளைப்பதில்லை என்பதறிக நாம் போனால்  நானிலம் அழிந்துவிடும்- என்று நினைத்தால் உன்போல் மூடனில்லை சி.செ

ஆயுதம் செய்

உலகம் முழுதுமின்று இச்சையின் ஆசையில்  எச்சையாய் திரிந்திடும் நரிகளின் நகர்வலம்,  அது நடுசாமத்திலும்  அலைந்திடும் கேள்... மேன்மையில் சிறந்த பெண்ணியத்தை குலையறுக்க காத்திரும் கயவர் கூட்டங்கள் கண்டால் நீயும் கலங்காதே கலக்கத்திலும் நடுக்கத்திலும் துரத்தவும் வழி செய்யாதே.. தூயவளே.... தூயமனத்தோடும்  துனிகரத்தோடும் துணைபோ.... அவன் தேடலில் கொஞ்சம் ஆவலை தூண்டு அவனுள் நீயும்  தொலைந்து போ... அவனையும் உன்னில்  தொலையச் செய்... தயக்கமின்றி  அவன் சிந்தையை திசை திருப்ப உன் ஆடையில் ஒன்றை அவிழ்த்தெறி... அங்கங்கள் ஒவ்வொன்றாய் தேடிப்போ... அந்தரங்க இடமதையும் நாடிப்போ.... இப்போது கேள்...! இவன் குலையறுக்க வந்தவன்  என்பது நினைத்து நில்... பதட்டம் வேண்டாம்... ஈவு இரக்கமும் வேண்டாம் துணிந்து செய்... அறுக்க முடிந்தாலும் சரி இல்லை கடித்தெடுக்க முடிந்தாலும் சரி மிச்சம் வைக்காதே... மிச்சமேதும் வைத்திடாதே... உற்றவன் என்பவனும் உயிர்நாடி இழந்தவன் உயிர்காக்கவே துடிப்பான் சிலநேரம்  உன் உயிருக்கும்  உலைமூட்டுவான்  போகட்டும்  போராட்டம் என்றால் விழுப்புண் வேண்டும்தானே இல்லையேல் வீரமேது உன் வீரதீரச் செயல் பத்து இடங்களில் பத

எதார்த்தம்

சுகபோகம் என்பது  சும்மா வார்த்தையில் காட்டும் வசந்தம்தான் வறுமை கொண்டவனுக்கும் வாய்ப்பை விட்டவனுக்கும் சுகம் என்பது அது எப்போதும்   தூரத்தில் இருக்கும் சந்தனம்

அன்பு

அன்பு என்பதே  ஆகப்பெரிய   ஆயுதம்தான்  அதுவும்  வம்பு வரும்போதுதான்  தெரியும்  அது  வில்லிருந்து  வரும்  அம்பைவிடக்  கொடியதென்று... சி.செ

யோசிப்போம்....

அனுமதியா  அறிவுரையா  எதை நீ எதிர்ப் பார்க்கிறாய் அனுமதி கோருதல்  அடிமைதனம் அறிவுரை கேட்பது அறியாமைத்தனம் அறியாமை என்பது  இழிவில்லை அடிமைத் தளையைப் போலொரு  இழிவே இல்லை

பெண் கல்வி

இந்த வார்த்தையை ஏளனம் என்று  எண்ணிய எத்தர்கள் - இன்று  ஏட்டிலும் இல்லாமல்  இடுகாட்டிலும் இல்லாமல் எங்கோ  போயினர் போயினர் பொடிகூட மிஞ்சாமல் காற்றோடு கலந்து  காணாமல் போயினர் கல்வி அது  காலத்தால் அழியாத காவியத் தலைவி ஆயிரம் செல்வங்கள்  அடிபோட்டு நின்றாலும்  கள்வனும் கொள்ளை  கொண்டிட முடியா  கற்பனைக்கு கிட்டா  அற்புத சுரபி அது  அம்மையின் சொல்லி  வாய்மொழி பேச்சில் அழகாய் தொடங்கிய  முற்கண் கல்வி அவ்வழி,  ஆளானபின்னும் முடிவில்லா கல்வி நாளைய சந்ததி நலம்பெறும் கல்வி அதுதான் நல்லோர் போற்றிடும் பெண்களின் கல்வி இன்று ஆயிரம் தடைகளை பெருங்கடல் அலைகளை கடந்து வருவதே  பெரும்பாடு கொண்டோம்  அதிலும் அடுக்குகள் பலவாய் பதினாயிரம் கொடுத்து  வடிகட்டி வடிகட்டி  எங்களை வாட்டி வதைப்பதே வாடிக்கையானது  அதில் நீட்டும் கொஞ்சம்  கைகொட்டி சிரிக்குது எல்லாம்,  விதி செய்யும் சதி என்றோ இல்லை,  மதிசெய்த விதியென்றோ கடந்திட நினைத்தால்  சாமத்தில் திரியும்  காமச் சண்டாளன் கொடுமையும் திண்டாடச் செய்யுது இதிலெங்கள் பெண்கல்வியும்  தள்ளாடி நிற்குது இந்நிலை இல்லாது போக்கிட பெண்ணினம் நலமோடு காத்திட ஒரு துப்பாக்கி வேண்டும் ஆம்  ஒரு து

நியாயமாரே... கேளும்...

நல்லவன் செயலில்  நாமும் நின்றால் - நம்மையும் நானிலம் போற்றிடும் அறிக!  வல்லவன் கூட்டில் வந்தவர் எல்லாம் குஜபலன் என்றே கூவிக் குமையும் புரிக!! அட கள்வன் ஒருவன் கரம்பற்றி நின்றால்....! பார்ப்பவர் கண்கள் என்னென்று சொல்லும் தெரிந்து கொள்,  புற நீதிக்கு போதனை செய்தவர் கூட  நாணத்தில் சாகும் நாளொன்றில் நில்லும் நாடறிந்த நாணமற்றோனை பேரெடுத்த பெருந்திருடனை ஆகச்சிறந்த நல்லவனென்று காக்கும் கரங்களை கடுஞ்சொல் வீசாது கண்ணீரொழுக கண்டு மயங்கவோ...நான் பசிக்கு இரையாவது பசுந்தளிர் தழைக்கும் பலமில்லா உயிர்க்கும் பாழும் உலகம்,  காலகாலமாய் விதித்தே விதி என்றானது நாம் பகுத்தறிந்து கண்டதால் ஆறறிவும் கொண்டோம் பகைமை உளத்தால் - நெஞ்சில் பகுத்தறிவாத் துஞ்சும் குற்றம் இழைத்தக் குள்ளனின் பக்கம் நிற்பதில் என்ன நியாயம் மானியரே- நீங்கள் மதி மறந்திரோ - அன்றி மந்தியின் குணம் கொண்டீரோ கடலை உருண்டையோடு கடன்பட்ட வாழ்க்கையின் கண்ணீர் கரிசலையும் விற்றுப் பிழைக்கும் பேரிளம் பெண்மையிடம் உனக்கென்ன வீம்பின் வீரத்தின் சாரம் சாதியம் போற்றிடவா ?  சண்டிய ராகிடவா ? கள்வனுக்கு  கஞ்சி வைப்பவனும் கள்வனே இது நாடறிந்த சேதி இனியேனும் யோசி

சீர்வரிசை

பிறந்த எட்டோடு  புலம்பும் நான்தான் பட்டு என்னை பூச்சூட்டவரும் மணாளன் யாரவரோ இங்கிட்டு எல்லாம் பட்டு எனக்கும் தெரிந்துதான்  பெயர் வைத்தும் விட்டாரோ வேதனையோடு இன்னும் பல இன்னல்களும் சொல்லில் அடங்கா சோகங்களும் எல்லாம் சேர்ந்த  உருவாய்,  கருவாய்  நான் பிறப்பேன்  என்று மட்டும் நினைத்துவிட்டு அன்று பெற்றவளோடு பேரு வைத்தவனும்  போயினன் போயினன் மற்றவர் ஏசும் ஏளனம் அதுவென்  போதாகாலம் என்றே  ஆயினன் ஆயினன் தங்கை எட்டையும் கரைசேர்த்து சீர்வரிசையும் சில கொடுத்து என் ஏக்கமதையும் தொலைத்து உள்ளமன்று விட்ட இடந்தேட அல்லல் நித்தம் எனை வாட்ட நானோ.... கரை தட்டும் கலமானேன் இயற்கையின் படைப்பு  இன்னும் எனக்கிருக்கு முதுமையும் கொஞ்சும் அது முகத்தில்  குறைவின்றி துஞ்சும் நறைகூட மெல்ல  நாட்டியமாடி செல்லும் இடைகூட இன்னும் இல்லாததை சொல்லும் வந்தோரெல்லாம்  வயது மூப்பதை காட்டி வாயார வாழ்த்தி  வயிறாற புசித்து வந்தவழி போவர்,  வயதும் வம்பிட்டே போகும் கடமை என்று காலம் கடத்தினேன் நான் காலம் இப்போதென்னையும் கடத்திடத்தான் பார்க்குது காலனோடு என்னை சேர்த்து எல்லாம் இருக்க அன்றுபோல் இன்றும் என் உள்ளமும் இருக்க உரிமை என்றொரு சொ