நல்வழி தாரீர்
ஆண்டுக் கொருமுறை அரும்பாடு பட்டு(ம்) வாங்கிய நாட்காட்டியை கிழிக்கும்போது தோன்றும் இந்த ஆண்டேனும் என்வாழ்வில் இனிது கிடைக்குமா.... என்று வருந்திடும் உள்ளத்தை வாகைசூட்டி மகிழ்ந்திடச் செய்யவேண்டி உங்கள் மந்திர வார்த்தையில் தந்திரம் புகுத்தி சுந்தத் தமிழில் சொற்சுவை ஏற்றி மானுடவாழ்க்கையை நன்நெறிப்படுத்த கைத்தறி நெய்த ஆடையைப்போலொரு கவிதையைத் தாரீர் என்பேன் தந்திடும் கவிதையின் நற்கருத்தினை யாவரும் ஏற்கும் வண்ணம் படைத்திடுவீர் க, விதை என்று அழைப்பிட்டு மகிழ்வேன் வருக கவித்தேன் தருக