அது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழிசெல்லும் நெடுஞ்சாலை. புதுக்கோட்டையில் இருந்து சரியாக 12 வது மையில்கல் தொலைவில். ஒரு சோலைவனம் போல் காட்சி தரும், அந்த அழகான மரங்கள் கூடியிருக்கும் இடத்தில், எப்போதும் ஏதேனும் ஒரு பழவகையை , அது வாழையோ , கொய்யாவோ நாவற்பழமோ வைத்துக் கொண்டு, விற்பனை செய்து கொண்டிருக்கும் அந்த 70 வயது மூதாட்டி. பேரு அருக்காணி இப்போதெல்லாம் அந்த சாலையை கடந்து செல்வோரில் சிலர் அங்கே வாகனத்தை நிறுத்தி பழங்கள் வாங்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. வாடிக்கையாளரின் அதிகரிப்பால் அருக்காணி பாட்டி ஒருநாள் கூட, கடை வைக்காமல் நிறுத்தியது இல்லை. காரணம் நம்மை நம்பிவருபவர்கள் ஏமாறக் கூடாது என்ற கடமை உணர்வுதான். அதை தொழில் நேர்த்தி என்றும் சொல்லும் பாட்டி. ஒரு நாள் பாட்டி கடை நடத்திக் கொண்டிருக்கும் போது அந்த வழியே பள்ளிக்கூடம் போகும் பவுனுத்தாயி சிரித்த முகத்தோடு வந்தாள். வந்தவள் பத்துரூபாய் பணத்தை பாட்டியின் மடியில் போட்டுவிட்டு, நாவற் பழத்தை எடுத்து ருசிக்கலானாள். கூடவே புத்தகத்தையும் விரித்து படிக்கலானாள். பணங்கொடுத்து வாங்கினாலும் பாட்டியின் பேத்தியிவள். " என்னடி ஆ